கரூர் மாநகராட்சியில் தி.மு.க பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது. கரூர் மாநகராட்சில் உள்ள ஒரு தெருவுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பெயரை வைப்பதற்கான சிறப்புத் தீர்மானம் கரூர் மாநகராட்சிக் கூட்டத்தில் தி.மு.க உறுப்பினர்களால் செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்டு கிட்டத்தட்ட நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதற்கு முன், ஒரு தெருவுக்கு அல்லது ஒரு கட்டிடத்திற்கு உயிருடன் இருக்கும் ஒருவரின் பெயரை வைக்க முடியாது என்ற காரணத்திற்காக தெருவுக்கு உதயநிதி பெயர் வைக்கும் தீர்மானம் திரும்பப் பெறப்பட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், அண்மையில், தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகப் பதவியேற்றார்.
இந்நிலையில், கரூர் மாநகராட்சி மன்றக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில், அமைச்சர் உதயநிதியின் பெயரை ஒரு தெருவுக்கு வைக்க வேண்டும் என வலியுறுத்தி சிறப்புத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
தி.மு.க-வைச் சேர்ந்த 36-வது வார்டு கவுன்சிலர் வசுமதி, உதயநிதியின் பெயரை தனது பகுதியில் உள்ள மணக்களம் தெருவின் பெயரை மாற்ற தீர்மானம் கொண்டு வந்தார். “கரூர் மாநகராட்சியில் உள்ள மணக்களம் தெருவின் பெயர் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டு, மணக்களம் முதல் தெரு, இரண்டாவது தெரு மற்றும் மூன்றாவது தெரு மற்றும் குறுக்குத் தெருக்கள் உள்ளிட்ட இந்த தெருவுக்கு உதயநிதி என பெயரிட வேண்டும் என தீர்மானம் கொண்டுவந்தார். தெருவுக்கு உதயநிதி பெயர் வைக்க வேண்டும் எனக் கோரிய இந்த தீர்மானத்துக்கு அனைத்து கவுன்சிலர்களும் ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்று வசுமதி கூறினார்.
கரூர் மாநகராட்சியில், தி.மு.க-வைச் சேர்ந்த 46 கவுன்சிலர்களும் இந்த பெயர் மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்த நிலையில், மீதமுள்ள 2 அ.தி.மு.க கவுன்சிலர்கள் அமைதி காத்தனர். சிறிது நேரம் விவாதம் நடைபெற்றபோது, சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்ற மேயர் கவிதா கணேசன் ஆயத்தமானார். உயிருடன் இருக்கும் ஒருவரின் பெயரை தெரு அல்லது கட்டிடத்திற்கு வைக்க வேண்டாம் என தி.மு.க தலைமை கூறியதை கவுன்சிலர்கள் நினைவு கூர்ந்தனர். இதையடுத்து இந்த தீர்மானம் nவாபஸ் பெறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.