கரூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜேந்திரன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
பட்டியல் சாதியை குறிக்கும் சொல்லை அவதூறு பரப்பும் விதமாக சீமான் பயன்படுத்தியதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பேரில், சீமான் மீது வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தான்தோன்றிமலை காவல் நிலைய போலீசார் சீமான் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டுமென கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“