அமைச்சர் செந்தில் பாலஜிக்கு தொடர்புடைய 200க்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மே 26ஆம் தேதி சோதனை நடத்தினார்கள்.
இந்தச் சோதனை காலை 7 மணி முதல் நள்ளிரவு வரை தொடர்ந்தது. குறிப்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் நடந்தது.
அதிலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு அமைந்துள்ள மண்மங்கலம் பஞ்சாயத்தில் மட்டும் 26 இடங்களில் சோதனை நடந்தது. இந்நிலையில் கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடி திமுகவினரால் உடைக்கப்பட்டது.
அப்போது பெண் அதிகாரி ஒருவர் தி.மு.க.வினரால் துன்புறுத்தப்பட்டார் எனக் குற்றஞ்சாட்டு எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்த நிலையில், கரூர் மாநகராட்சி கவுன்சிலர் லாரன்ஸ் உட்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆக கைதானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“