Advertisment

ஐ.டி அதிகாரிகள் மீது தாக்குதல்: கரூர் தி.மு.க கவுன்சிலர் கைது

கரூர் திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

author-image
WebDesk
New Update
Karur DMK councilor Lawrence arrested

செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.

அமைச்சர் செந்தில் பாலஜிக்கு தொடர்புடைய 200க்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மே 26ஆம் தேதி சோதனை நடத்தினார்கள்.

இந்தச் சோதனை காலை 7 மணி முதல் நள்ளிரவு வரை தொடர்ந்தது. குறிப்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் நடந்தது.

Advertisment

அதிலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு அமைந்துள்ள மண்மங்கலம் பஞ்சாயத்தில் மட்டும் 26 இடங்களில் சோதனை நடந்தது. இந்நிலையில் கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடி திமுகவினரால் உடைக்கப்பட்டது.

அப்போது பெண் அதிகாரி ஒருவர் தி.மு.க.வினரால் துன்புறுத்தப்பட்டார் எனக் குற்றஞ்சாட்டு எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த நிலையில், கரூர் மாநகராட்சி கவுன்சிலர் லாரன்ஸ் உட்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆக கைதானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Dmk V Senthil Balaji Karur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment