தாழ்த்தப்பட்டவர் என போலி சாதி சான்றிதழ் மூலம் வேலைக்குச் சேர்ந்த ஆசிரியர் இடைநீக்கம்

விசாரணையில், கண்ணன் தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர், என போலி சான்றிதழ் தயாரித்தது தெரிய வந்தது.

By: October 19, 2019, 9:10:11 AM

கருர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 22 ஆண்டுகளுக்கு முன்பு போலி சாதி சான்றிதழ் மூலம் வேலைக்குச் சேர்ந்த, ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கரூரிலுள்ள, பெரிய வடுகபட்டி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வருபவர் எம்.கண்ணன். அவருக்கு வயது 47. இவர் போலி சாதி சான்றிதழ் மூலம் வேலைக்குச் சேர்ந்ததால்,  தலைமை கல்வி அதிகாரி சி.முத்துக்கிருஷ்ணன், கண்ணனை வெள்ளிக்கிழமை அன்று பணி இடைநீக்கம் செய்தார்.

கண்ணனுக்கு எதிராக புகார் வந்ததையடுத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம், இதை விசாரித்து 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியது. ”விசாரணையில், கண்ணன் தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர், என போலி சான்றிதழ் தயாரித்தது தெரிய வந்தது” என கரூர் மாவட்ட ஆட்சியர் டி.அன்பழகன் தெரிவித்திருக்கிறார்.

அதோடு, அந்த சான்றிதழை வழங்கிய, தசில்தார், வருவாய் ஆய்வாளர்,  சான்றிதழை வழங்க தசில்தாருக்கு பரிந்துரை செய்த VAO ஆகியோருக்கு எதிராக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Karur government school teacher suspended fake community certificate

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X