scorecardresearch

4 மாணவிகள் நீரில் மூழ்கி மரணம்: ஆசிரியர் கைது

கரூர் மாவட்டம் மயனூர் ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த விவகாரத்தில் மாணவிகளை ஆற்றுக்கு அழைத்து சென்ற ஆரிசியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

4 மாணவிகள் நீரில் மூழ்கி மரணம்: ஆசிரியர் கைது

கரூர் மாவட்டம்  மயனூர் ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழந்த விவகாரத்தில்  மாணவிகளை ஆற்றுக்கு அழைத்து சென்ற ஆரிசியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம்  விராலிமலை  பகுதியில் உள்ள  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த  மாணவிகள் 15 பேர் திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக நேற்று உயற்கல்வி ஆரிசியருடன் சென்றுள்ளனர்.

போட்டியில் பங்கேற்ற மாணவிகள் பின்னர் கரூர் மாவட்டம்  மாயனூர் கதவணை பகுதியை சுற்றி பார்த்துவிட்டு செல்லாண்டியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு காரிவி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கி உள்ளனர்.  அப்போது 4 மாணவிகள் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்நிலையில் 4 மாணவிகள் குடும்பத்தினருக்கும் தலா ரூ.2  லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

மேலும் தலைமை ஆரிசியர் பொட்டுமணி விளையாட்டுப் போட்டிக்கு அழைத்து சென்ற ஆசிரியர்கள் இப்ராஹிம் மற்றும் திலகவதி ஆகியோர் தற்காலிக பணியிட  நீக்கம்  செய்யப்பட்டனர். இந்நிலையில் மாணவிகளை ஆற்றுக்கு அழைத்து சென்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Karur kaveri river four students dead and teacher arrested

Best of Express