மொபைல்போன் வெடித்து தீவிபத்து – தாய்,மகன்கள் பலி : கரூரில் பரபரப்பு

Mobile phone blast – 2 dead : போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

karur, mobile phone, blast, fire accident, charging, muthulakshmi, sons, dead, police, investigation, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil

கரூர் மாவட்டம் ராயனூரில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் மகன்கள் மொபைல் போன் வெடித்ததில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவர் தனது கணவரை பிரிந்து தனது இரட்டை ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்துலட்சுமி வீட்டில் வீட்டினுள் சார்ஜ் போட்டு, அருகில் தூங்கிக் கொண்டிருந்த போது மொபைல்போன் வெடித்ததாகவும், இதனால் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி மூன்று பேரும் பரிதாபமாக இறந்துள்ளனர். தாய் முத்துலட்சுமி மரணம் அடைந்ததாகவும், மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவரின் மூன்று வயது மகன்கள் இருவரும் செல்லும் வழியிலயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இது விபத்தா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Karur mobile phone blast fire accident charging muthulakshmi sons dead police investigation

Next Story
Tamil News Highlights: மணிப்பூர் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி- 8 காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆப்சென்ட்Manipur CM N Biren Singh
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express