/tamil-ie/media/media_files/uploads/2021/11/MP-jothimani.jpg)
Karur MP Jothimani stages protest: ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக என்னுடைய பணிகளை மேற்கொள்ளவிடாமல் தடுத்து வருகிறார் என்ற குற்றச்சாட்டை கரூர் மாவட்ட ஆட்சியர் மீது வைத்துள்ள கரூர் தொகுதி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தற்போது அங்கே உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான என்னை மக்கள் பணி செய்யவிடாமல் தடுக்கும் கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ,கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டதை துவங்கியுள்ளேன். pic.twitter.com/keOWHFMwRY
— Jothimani (@jothims) November 25, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்காக நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதியை அந்தந்த தொகுதிகளில் உள்ள தகுதியான பயனாளர்களுக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இந்த கூட்டத்தை கரூர் மாவட்டத்தில் 6 மாதங்களாக நடத்தவில்லை என்றும், கூட்டம் நடத்த வலியுறுத்திய போதிலும் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யவில்லை என்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மீது குற்றம்சாட்டியுள்ளார். ஜோதிமணி பிரபு சங்கரை கண்டித்து தற்போது அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Developing story
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.