'விஜய்யை கைது செய்'... நாமக்கல்லில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததைக் கண்டித்து, தமிழ்நாடு மாணவர் சங்கம் பெயரில் நாமக்கல் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததைக் கண்டித்து, தமிழ்நாடு மாணவர் சங்கம் பெயரில் நாமக்கல் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Karur Stampede 41 death poster against TVK Vijay in namakkal Tamil News

போஸ்டரில் "தமிழக அரசே 39 அப்பாவி உயிர்களைப் பலி வாங்கி, தப்பி ஓடிய விஜய் என்கிற அரசியல் தற்குறியை கொலைக்குற்றவாளி என கைது செய்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விஜய் பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கியது தமிழக அரசு.

Advertisment

இதனையடுத்து இந்த துயர சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்த விஜய், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவித்தார். இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததைக் கண்டித்து, தமிழ்நாடு மாணவர் சங்கம் பெயரில் நாமக்கல் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில் "தமிழக அரசே 39 அப்பாவி உயிர்களைப் பலி வாங்கி, தப்பி ஓடிய விஜய் என்கிற அரசியல் தற்குறியை கொலைக்குற்றவாளி என கைது செய்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான போஸ்டர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி: க.சண்முகவடிவேல். 

Vijay Tamilaga Vettri Kazhagam Namakkal

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: