/indian-express-tamil/media/media_files/2025/10/08/karur-vijay-2025-10-08-11-31-44.jpg)
Karur stampede victims Vijay video call TVK Arun Raj
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த இரு நாட்களாகத் தொடர்ந்து வீடியோ கால் மூலம் ஆறுதல் தெரிவித்து வருகிறார். உயிரிழந்த 41 பேரில், 33 நபர்களின் உறவினர்களிடம் விஜய் பேசி முடித்துள்ளார்.
இந்த வீடியோ கால் உரையாடலின்போது, அருண்ராஜ், கரூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் உடனிருந்துள்ளனர்
இன்று கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அருண் ராஜ், "கரூரைச் சேர்ந்த 33 குடும்பத்தினரிடம் எங்கள் தலைவர் வீடியோ கால் மூலமாகப் பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், 'நீங்கள் தைரியமாக இருங்கள், தொடர்ந்து போராடுங்கள்' என்று தலைவருக்கு ஆறுதல் கூறினர். மேலும், கரூர் சுற்றியுள்ள மற்ற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களிடமும் விஜய் விரைவில் வீடியோ காலில் பேசவுள்ளார்”, என்று தெரிவித்தார்.
மேலும், "பாதிக்கப்பட்டவர்களை விரைவில் விஜய் நேரில் வந்து சந்திக்க உள்ளார். இது தொடர்பாக டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாகக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்று (அக்டோபர் 8, 2025) டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் சென்று அனுமதி கேட்க இருக்கிறோம், அரசு நடவடிக்கைகளுக்கு இப்போது கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் என்றும் அருண் ராஜ் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.