/indian-express-tamil/media/media_files/2025/09/29/karur-2025-09-29-16-53-01.jpg)
Karur
கரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 27) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இதில் குழந்தைகள் மற்றும் பெண்களும் அடங்குவர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவத்தின் பின்னணி குறித்து ஆராய, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையம் தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கோரமான கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விரிவாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமமாலினி தலைமையில் ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த எம்.பி.க்கள் குழு, பாதிக்கப்பட்டோரைச் சந்தித்து, சம்பவத்தின் பின்னணி மற்றும் சூழல்கள் குறித்து விசாரித்து, விரைவில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
குழுவில் இடம்பெற்றுள்ளோர்:
ஹேமமாலினி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில், பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள்:
அனுராக் தாக்கூர்
தேஜஸ்வி சூர்யா
பிரஜ் லால்
ஸ்ரீகாந்த் ஷிண்டே
அப்ரஜிதா சாரங்கி
ரேகா சர்மா
புட்டா மகேஷ் குமார் ஆகியோர் அடங்குவர்.
இந்தக் குழுவினர் விரைவில் கரூர் வந்து சம்பவம் நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்யவுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறுவதுடன், அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து, சம்பவம் நிகழ்ந்ததற்கான காரணங்கள் மற்றும் சூழல்கள் குறித்து விரிவாக ஆராய்வார்கள். இந்தக் குழுவின் விசாரணையும், அளிக்கப்படவுள்ள அறிக்கையும், கரூர் சம்பவத்தின் அரசியல் மற்றும் நிர்வாகப் பிழைகளை வெளிக்கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.