கரூர் சோகம்: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வீடியோ காலில் ஆறுதல் கூறிய விஜய்- 'அண்ணன் ஸ்தானத்தில் இருப்பேன்' என உறுதி

உயிரிழந்தவர்களில் ஒருவரான இளைஞர் தனுஷ்குமாரின் தாயார் மற்றும் தங்கையிடம் வீடியோ காலில் பேசிய விஜய், "நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. இது எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாத இழப்பு" என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் ஒருவரான இளைஞர் தனுஷ்குமாரின் தாயார் மற்றும் தங்கையிடம் வீடியோ காலில் பேசிய விஜய், "நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. இது எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாத இழப்பு" என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Karur vijay

Karur

கரூர்: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூரில் தான் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் நிகழ்ந்த துயரமான கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருடன் தற்போது வீடியோ கால் மூலம் பேசி, தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து வருகிறார்.

Advertisment

கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நடந்த இச்சம்பவத்தில் 41 பேர் பலியானதோடு, 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் உள்ளிட்ட தேசிய மற்றும் மாநிலத் தலைவர்கள் பலரும் நேரில் சென்று ஆறுதல் கூறிவந்த நிலையில், விஜய் கரூருக்குச் செல்லாதது விமர்சனத்துக்குள்ளானது.

இந்தச் சூழலில், கடந்த திங்கள்கிழமை மாலை முதல் விஜய், உயிரிழந்தோரின் குடும்பங்களைத் தனித்தனியாக வீடியோ காலில் தொடர்புகொண்டு பேசி வருகிறார்.

"எல்லா உதவிகளும் செய்வேன்... அண்ணன் ஸ்தானத்தில் இருப்பேன்"
முதலில், கூட்ட நெரிசலில் உயிரிழந்த தனுஷ்குமாரின் தாயார் மற்றும் அவரது சகோதரி ஹர்ஷினியுடன் விஜய் வீடியோ காலில் பேசினார்.

Advertisment
Advertisements

அப்போது, தனுஷின் சகோதரி ஹர்ஷினியிடம் உருக்கமாகப் பேசிய விஜய், "நான் உங்களுக்கு ஒரு சகோதரனாக இருந்து எல்லா உதவிகளும் செய்வேன். நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. இது எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாத இழப்பு. விரைவில் உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன்” என்று உறுதி அளித்துள்ளார்.

அதேபோல், மனைவி பிரியதர்ஷினி மற்றும் மகள் தரணிகா ஆகியோரை இழந்த டாஸ்மாக் ஊழியர் சக்திவேலிடமும் பேசிய விஜய், "தவெக சார்பில் தேவையான உதவிகளைச் செய்து, எப்போதும் துணையாக நிற்போம்" என்று ஆறுதல் கூறியுள்ளார்.

20 நிமிடங்கள் மௌனத்துடன் ஆறுதல்

விஜய், ஒவ்வொரு குடும்பத்துடனும் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேசியதாகவும், பேசும்போது அதிக நேரம் மௌனமாக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பின்போது புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏற்கெனவே உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி அறிவித்த விஜய், தற்போது அனைத்து குடும்பங்களுடனும் வீடியோ காலில் பேசி முடித்த பிறகு, கரூருக்கு நேரில் வந்து ஆறுதல் சொல்வார் என்று தவெக தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Actor Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: