/indian-express-tamil/media/media_files/2025/09/30/felix-2025-09-30-09-42-40.jpg)
YouTuber Felix Gerald Arrested Over Karur Stampede Remarks
YouTuber Felix Gerald arrested: த.வெ.க தலைவர் விஜய், கரூரில் கடந்த 27-ஆம் தேதி பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் இந்தியா முழுவதையும் உலுக்கியது. கரூர் காவல்துறையினர் உயிரிழப்பு தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே கரூர் உயிரிழப்பு தொடர்பாக த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலர் மதியழகன் ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக கரூர் டிஎஸ்பி செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக கூடுதல் எஸ்.பி., பிரேமானந்தனை நியமித்து பொறுப்பு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், கரூர் துயரம் தொடர்பாக தவறான தகவல் பரப்பியதாக ஊடகவியலாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார். த.வெ.க கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக வதந்தி மற்றும் தவறான தகவல் பரப்பியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக இதுவரை 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று பா.ஜ.க நிர்வாகி, த.வெ.க தொண்டர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஊடகவியலாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் தவறான வதந்திகள் பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.