/indian-express-tamil/media/media_files/2025/09/28/karur-2025-09-28-07-51-36.jpg)
கரூரில் நடைபெற்ற த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் கரூர் மாநகரை கண்ணீரில் மூழ்கடித்துள்ளது. இந்நிலையில், கரூரில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தான விபரங்களை தெரிந்து கொள்ள, தொடர்பு கொள்ள வேண்டிய கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அவசர உதவி மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மக்கள் நேரடி எண்: 04324 256306 வாட்ஸ் அப் எண்: 7010806322 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். கரூர் கூட்ட நெரிசல் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்ல, “நான் இன்றிரவே கரூர் சென்று மேற்படி துயர சம்பவத்தில் உயிரழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் தெரிவிக்கவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்கவும் உள்ளேன்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் வழங்கிடவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கரூர் சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக, கரூர் வேலு​சாமிபுரத்​தில் தவெக தலை​வர் விஜய் நேற்​றிரவு தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டார். முன்​ன​தாக காலை 10.30 மணிக்கு விஜய் பிரச்​சா​ரம் செய்ய காவல் துறை தரப்​பில் அனு​மதி அளிக்​கப்​பட்​டிருந்​தது. ஆனால், நாமக்​கல்​லில் பிரச்​சா​ரம் செய்​து​விட்டு பிற்​பகல் 3 மணிக்​குப் பிறகு​தான் விஜய் அங்​கிருந்து கிளம்​பி​னார்.
இதற்​கிடையே, கரூர் வேலு​சாமிபுரத்​தில் பகல் 12 மணி முதலே தொண்​டர்​கள், ரசிகர்​கள் திரண்டனர். கரூர் மாவட்ட எல்​லை​யான வேலா​யுதம்​பாளை​யத்​தில் இருந்தே கூட்​டம் அதி​க​மாக இருந்​த​தால் பிரச்​சா​ரப் பேருந்து மிக​வும் மெது​வாக நகர்ந்​தது. இதனால் இரவு 7.25 மணிக்​கு​தான் பிரச்​சார இடத்​துக்கு விஜய் வர முடிந்​தது.
அங்கு விஜய் பேச ஆரம்​பித்​த​போது, அவரது மைக் வேலை செய்​ய​வில்​லை. அவரது பேச்​சைக் கேட்​ப​தற்​காக பின்​னால் இருப்​பவர்​கள் நெருங்​கியடித்​த​படி பிரச்​சா​ரப் பேருந்தை நோக்கி வந்​தனர்.
இதனால் முன்​னால் காத்​திருந்​தவர்​கள் நெரிசலில் சிக்​கினர். விஜய் பேசிக் கொண்​டிருந்​த​போதே மூச்​சுத் திணறி பலர் அடுத்​தடுத்து மயங்கி விழத் தொடங்​கினர். மேலும், அப்​பகு​தி​யில் இருந்த மரக்​கிளை உடைந்து விழுந்​த​தி​லும் சிலர் காயமடைந்​தனர். விஜய் பிரச்​சா​ரத்தை முடித்து கிளம்​பிய பின்​னரே அவர்​களை மீட்க முடிந்​தது. அங்​கிருந்து ஆம்​புலன்ஸ் மூலம் மீட்​கப்​பட்ட பெண்​கள், குழந்​தைகள் உள்​ளிட்​டோர் கரூர் காந்தி கிராமத்​தில் உள்ள அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை, கோவை சாலை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர்.
இவர்​களில் 8 குழந்​தைகள், 16 பெண்​கள் உட்பட மொத்​தம் 39 பேர் உயி​ரிழந்​தனர். இவர்​கள் அனை​வரின் உடல்​களும் கரூர் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை பிரேதப் பரிசோதனைக் கூடத்​தில் வைக்​கப்​பட்​டுள்​ளன. 40-க்​கும் அதி​க​மானோர் தீவிர சிகிச்​சை​யில் உள்​ளனர். இதில் சிலர் கவலைக்​கிட​மான நிலை​யில் உள்ளனர். உயி​ரிழந்​தவர்​கள், சிகிச்​சை​யில் உள்​ளோரின் குடும்​பத்​தினரும், உறவினர்​களும் மருத்​து​வக் கல்​லூரி முன்பு கூடியுள்ளனர். அவர்​கள் கதறி அழுது துடித்​த​தால் அப்​பகுதி முழு​வதும் சோகமய​மாக காட்​சி​ளித்​தது.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் மயங்​கிய​தாக தகவல் தெரிய​வந்​ததும், பேச்சை சுருக்​க​மாக முடித்​துக் கொண்ட விஜய், அங்​கிருந்து திருச்​சிக்கு புறப்​பட்​டார். கார் மூலம் திருச்சி வி​மான நிலை​யத்​துக்கு வந்த விஜ​யிடம் செய்​தி​யாளர்​கள், ‘‘கரூரில் உங்​கள் பிரச்​சா​ரத்​துக்கு வந்​தவர்​களில் கூட்ட நெரிசலில் சிக்கி 30-க்​கும் அதி​க​மானோர் உயிரிழந்​துள்​ளார்​களே?’’ என கேட்​ட​போது, எந்​த கருத்​தும்​ கூறாமல்​, தலை​யைக்​ குனிந்தபடி சென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலையாத மரணம், மரணம் விளைவிக்கும் செயல், பிறர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் என்பன உள்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.