காசியும் தமிழகமும் ஒன்றுதான் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
ஒரு மாத காலம் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக வருகை தரும் தமிழர்களுக்கு உத்தரபிரதேச முதலமைச்சர் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்ட ட்வீட் “காசியாக இருந்தாலும் சரி, தமிழகமாக இருந்தாலும் சரி, நமது கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் தத்துவ மரபு ஒன்றுதான்.
'காசி தமிழ் சங்கமம்' ஆனது இந்த 'ஒன்றுபட்ட நிலை’யின் புனிதமான மற்றும் வளமான உணர்வை வெளிப்படுத்த ஒரு தனித்துவமான ஊடகம். அன்பென்ற உணர்வு இழைகளினால் இந்தியா முழுவதையும் பிணைத்த மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்பான வரவேற்பு. “ என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இதற்கு முன்னதாக “பாபா விஸ்வநாதரின் புண்ணிய ஸ்தலத்தில் 'காசி-தமிழ் சங்கமம்' விழாவிற்கு வரும் அனைத்து விருந்தினர்களுக்கும்/பிரமுகர்களுக்கும் அன்பான வரவேற்பு. இந்த விழா மரியாதைக்குரிய பிரதமரின் 'ஏக் பாரத்-ஷ்ரேஷ்டா பாரத்' உறுதிமொழிக்கு புதிய பரிமாணத்தை சேர்க்கும்.. இந்த நிகழ்வு இந்தியாவின் கலாச்சார நாகரிகத்தில் 'ராம சேது' போலவே இருக்கும்.” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.