scorecardresearch

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு கோவையில் இருந்து புறப்பட்ட 2வது ரயில்

காசிக்கும் தமிழகத்திற்குமான ஆன்மீகம் மற்றும் கலாச்சார தொடர்பை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு துவங்கியுள்ள காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கான இரண்டாம் கட்ட ரயில் சேவை கோயம்புத்தூரில் இருந்து இன்று அதிகாலை 4.40 மணிக்கு தொடங்கியது.

kasi tamil sangamam, varanasi, coimbatore, special train, tamilnadu, modi, narendra modi, kasi, tamil sangam

காசிக்கும் தமிழகத்திற்குமான ஆன்மீகம் மற்றும் கலாச்சார தொடர்பை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு துவங்கியுள்ள காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கான இரண்டாம் கட்ட ரயில் சேவை கோயம்புத்தூரில் இருந்து இன்று அதிகாலை 4.40 மணிக்கு தொடங்கியது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 83 பயணிகள் கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து காசி தமிழ் சங்கமம் ரயிலில் தங்களது பயணத்தை துவங்கினர்.

முதற்கட்ட பயணத்தில் மாணவர்கள் குழுக்களாக பங்கேற்று இருந்த நிலையில்

இந்த ரயிலில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் இசை கலைஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளது

மேலும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு செல்லும் பயணிகளை கோயம்புத்தூர் மாநகர மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் மலர் தூவியும் உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர்.

காசி தமிழ்ச் சங்கமம் ரயில் சேவை கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று அதிகாலை தொடங்கப்படுவதையடுத்து ரயில்வே மற்றும் மாநகர காவல்துறையினர் 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

செய்தி: பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Kasi tamil sanamam event second special train from coimbatore to varananasi