தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் சென்ற போது அவர் வீட்டில் இல்லை. அவர் தலைமறைவானதாக கூறப்பட்டது.
இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை ஐதராபாத்தில் வைத்து கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். அவருக்கு 29ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கஸ்தூரி ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். அதில், தனது குழந்தைகளை பராமரிக்க ஆள் இல்லை எனவும், தான் சிங்கிள் மதர், தனக்கு ஸ்பெஷல் சைல்ட் இருப்பதால் ஜாமின் வழங்க வேண்டும் என கஸ்தூரி கோரிக்கை வைத்தார்.
இந்த மனு இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு இன்று மாலை அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“