இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர் சுனில் ஜெமினி பொன்சேகா என்றழைக்கப்படும் ‘கட்டா’ காமினி பெங்களூருவில் அவரது மறைவிடத்தில் தமிழக காவல்துறையின் ‘கியூ’ பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிராமத்து ருசிக்கு நிகர் உண்டோ.. கருப்பட்டி பணியாரம்!
இலங்கை உட்பட பல நாடுகளில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் கொலை சம்பவங்களில் பொன்சேகா ஈடுபட்டிருந்தார். அவருக்கு அண்டர்வேர்ல்ட் டான் தாவூத் இப்ராஹிம் மற்றும் பிற சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஜான்சன் & ஜான்சன் கோவிட் -19 தடுப்பூசி சோதனை நிறுத்தம் இந்தியாவை பாதிக்குமா?
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அந்த நபர் இலங்கையிலிருந்து தப்பினார். பின்னர் சட்டவிரோதமாக காஞ்சிபுரம் அருகே உள்ல புதுப்பாக்கத்தில் ஆறு மாதங்கள் தங்கியிருந்தார். விசாரணையில் அவர் ஒரு தொழில்முனைவோராக காட்டிக்கொண்டு புதுப்பாக்கத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருப்பது தெரியவந்தது.
அதிகாரிகள் அவரது நகர்வுகளைக் கண்காணிக்கத் தொடங்கியதும், அவர் பெங்களூருக்கு தப்பி ஓடினார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”