திருச்சியையும், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பிற பகுதிகளையும் இணைக்கும் பிரதான பாலமாக விளங்கும் திருச்சி காவிரி பாலம் ஏற்கனவே சேதமடைந்து 8 மாதமாக போக்குவரத்து பயன்பாடு இல்லாமல், கடந்த மார்ச் மாதம் 4-ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது திருச்சியில் பெய்த கனமழை காரணமாக காவிரி பாலத்தில் ஒரு சில இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளது. புதிய பாலத்தில் இப்படி சாலை சேதமடைந்துள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பாலத்தின் கீழ் நடைபெறும் பணிகளுக்காக மேலே ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு ஜேசிபி மூலம் அள்ளப்படுவதால் சாலை மேலும் சேதமடைய வாய்ப்புள்ளது.

எனவே அதிகாரிகள் தலையிட்டு காவிரி பால சாலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளதும், பல கோடிகள் செலவழித்து புனரமைக்கப்பட்ட காவிரி பாலம் சிறிய மழைக்கே பல்லளிப்பது வேதனைக்குரியது என்கின்றனர் கடந்து செல்பவர்கள்.
செய்தி: க. சண்முகவடிவேல்