/indian-express-tamil/media/media_files/sSQqkrDLVgmYDx4EcwIX.jpg)
கேரள அரசை கலந்தாலோசிக்காமல் சுற்றுலா பேருந்துகளுக்கான வரியை உயர்த்திய தமிழக அரசின் நடவடிக்கைக்கு அமைச்சர் கே.பி.கணேஷ்குமார் சாடினார்.
சட்டசபையில் பேசிய அமைச்சர், கேரளாவுடன் கலந்தாலோசிக்காமல் தமிழகம் ரூ.4000 வரியை உயர்த்தியது. "கேரளாவில் சபரிமலை சீசன் வருவதை தமிழகம் நினைவில் கொள்ள வேண்டும். சபரிமலைக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அங்கு ரூ.4000 வாங்கினால் நாங்களும் இங்கு ரூ.4000 வாங்குவோம். எங்களுக்கு தீங்கு செய்தால், பதிலுக்கு நாங்களும் தீங்கு செய்வோம்" என்று கணேஷ் குமார் கூறினார்.
கே.எஸ்.ஆர்.டி.சி ஊழியர்களுக்கு மாதந்தோறும் 1 ம் தேதி ஒரே தவணையாக சம்பளம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
"இந்த முறையை அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வங்கிக் கடன் பெறுவதில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்கள் தீர்க்கப்படுகின்றன. கே.எஸ்.ஆர்.டி.சி., அதிக ஏ.சி. பஸ்களுக்கு மாறும். மாறிவரும் காலநிலை மற்றும் மாறிவரும் தேவைகளை கருத்தில் கொண்டு அதிக வசதிகளுடன் கூடிய பஸ்கள் அறிமுகப்படுத்தப்படும். கே.எஸ்.ஆர்.டி.சி. வணிக வளாகங்களின் விதிமுறைகள் தளர்வாக்கப்படும், முடிந்தவரை பல கடைகளை வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் மேலும் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.