சக்திசரவணக்குமார்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் 10-ஆம் கட்ட அகழாய்வு கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்த அகழாய்வில் ஏற்கனவே கண்ணாடி பாசி மணிகள், தா எனும் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை மீன் உருவிலான சிவப்பு வண்ண பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நிலையில், இன்று புதன்கிழமை உடைந்த நிலையில் செம்பு உலகத்திலான உடைந்து நிலையில் ஒரு பொருள் கண்டெடுக்கப்பட்டன.
இரும்பு, வெண்கல போன்ற கடின தன்மையில்லாத செம்பு பொருள்களை வீட்டு உபயோகப் பொருளாக பயன்படுத்தி இருக்கலாம் எனவும், இதனை ஆய்வுக்கு உட்படுத்தும் போது எத்தகைய பொருள், இதன் காலம் என்ன என்பது தெரிய வரும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும் கீழயில் நாள்தோறும் புதிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருவது ஆய்வாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“