Advertisment

வணிக நகரமா கீழடி? எடைக்கற்களை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்!

கீழடியில் ஆறாம் கட்ட அகழ்வாய்வு பணிகள் மே 23ம் தேதியில் இருந்து  சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Keezhadi latest updates : Archaeologists found weighing stones at site

Keezhadi latest updates : Archaeologists found weighing stones at site

Keezhadi latest updates : Archaeologists found weighing stones at site : கீழடியில் ஆறாம் கட்ட அகழ்வாய்வு பணிகள் மே 23ம் தேதியில் இருந்து  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மணலூரில் நடைபெற்று வருகிறது.  இதற்கு முன்பு நடைபெற்ற ஆய்வுகளில் எப்போதும் கண்டுபிடிக்கப்படாத எடைக்கற்கள் இம்முறை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 8 கிராம், 18 கிராம், 150 கிராம் மற்றும் 300 கிராம் எடைகளை கொண்ட கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்பகுதி ஒரு வணிக நகரமாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இதனை இந்த எடைக்கற்கள் உறுதி செய்துள்ளது.

Advertisment

நேற்றைய ஆய்வின் போது இரு வண்ணப் பானைகள், பெரிய விலங்கின் எலும்பு, இணைப்புக் குழாய் பானைகள், பாசி, சிறிய வகை உலை கலன் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு அடுக்கு தரை தளங்களும் கண்டறியப்பட்டது. இப்பகுதியில் தொழிற்சாலை இயங்கியதற்கான அடையாளமாக அது காணப்படுகிறது.

சிந்து சமவெளி நாகரீத்திற்கு முந்தைய நாகரீகமாக தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் அறியப்பட்டுள்ளது இந்த கீழடி பகுதி. எனவே இந்த அகழ்வாய்வின் மூலம் கண்டுபிடிக்கப்படும் பொருட்களைக் கொண்டு தமிழர்களின் நாகரீகம், வரலாறு, வாழ்க்கை முறை ஆகியவற்றை கண்டறிந்து வரலாற்றில் கூறப்பட்ட பல்வேறு விசயங்களை மாற்றி அமைக்க முடியும்.

இதுவரை நடத்தப்பட்ட கீழடி அகழ்வாய்வில் வழிபாட்டு பொருட்கள் எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே அன்று வாழ்ந்த மக்கள் பெரும்பாலும் இறை நம்பிக்கை அற்றவர்களாகவோ, இயற்கை மீதான நம்பிக்கை அதிகம் கொண்ட நபர்களாகவோ இருந்திருக்க கூடும் என்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Keezhadi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment