தென் மாவட்டங்களுக்கு செல்ல இனி கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்திற்கு சென்று பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று சி.எம்.பி.டி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பண்டிகை காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கத்தில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 2019 முதல் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது.
400 கோடி ரூபாய் செலவில் 88 ஏக்கரில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் தி.மு.க ஆட்சியில் தொடர்ந்து கட்டப்பட்டது. மேலும் பல முறை இதன் திறப்பு விழா தள்ளிச் சென்றது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஜனவரி மாதத்திற்கு முன்பாகவே திறந்து வைத்தார்.
மூன்றாம் பாலினத்தவருக்கான கழிப்பறைகள், பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த ஏதுவாக பிரெய்லி எழுத்துகள் என்று பல்வேறு அம்சங்கள் இந்த பேருந்து நிலையத்தில் உள்ளது. இந்நிலையில் சி.ம்.பி.டி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இன்று முதல், முன்பதிவு செய்த மற்றும் செய்யாத பயணிகள் தென்மாவட்டங்களுக்கு செல்ல முன்பதிவு செய்தோர், கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்திற்கு சென்று பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இன்று இயக்கப்பட உள்ள நிலையில், பொது மக்கள் குழப்பம் அடைவதை தவிர்க்க சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அறிவுப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“