Advertisment

கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் கைது! லஞ்சம் வாங்கியபோது பிடிபட்டார்

சென்னை கேந்திர விதயாலயா பள்ளி முதல்வர் ஆனந்தன் கைது. 1ம் வகுப்பு பள்ளி சேர்க்கைக்காக லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
anandan-Kendra vidyalaya

சென்னை அசோக் நகரில் செயல்பட்டு வரும் கேந்திர வித்யாலயா பள்ளியின் முதல்வராக ஆனந்தன் பணியாற்றி வருகிறார். இவரிடம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெற்றோர் தங்களின் மகனுக்காக அப்பள்ளியில் இடம் கோரி அணுகியுள்ளனர். அதற்கு ஆனந்தன் மாணவனின் பெற்றோரிடம் ரூபாய். 1 லட்சம் லஞ்சம் கேட்டார். கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவருக்குக் கல்வி வழங்க லஞ்சம் கேட்ட முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

எவ்வாறு பிடிபட்டார்?

பள்ளி முதல்வர் கேட்ட லஞ்சத்தைப் பெற்றோர் தர ஒப்புக்கொண்டனர். பின்னர் அவர் லஞ்சம் கோரியதை சிபிஐயிடம் பெற்றோர் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில், மாணவனின் பெற்றோ லஞ்சம் அளிக்கும் நேரம் முதலவரை ஆதாரத்துடன் கைது செய்ய சிபிஐ முடிவு செய்தது.

பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ளது முதல்வரின் இல்லம். பணத்தை ஏற்பாடு செய்த பெற்றோர் அவரின் வீட்டிற்குச் சென்று பணத்தை முதல்வரிடம் கொடுத்துள்ளனர். அப்போது அந்தச் சம்பவ இடந்திற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் ஆனந்தனை கையும் களவுமாகப் பிடித்தனர். பின்னர், அவரது இல்லம் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். சோதனைக்குப் பின்னர், லஞ்சம் வாங்கியதற்காகக் கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் ஆனந்தன் கைது செய்யப்பட்டார்.

பள்ளி சேர்க்கைகள் நடைபெற்று வரும் வேளையில் இவ்வாறு மாணவர்களின் கல்வியை வியாபாரமாக்கப்படுவது பொதுமக்களிடையே மனவருத்தத்தையும் கோபத்தையும் அளித்துள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment