Advertisment

கேரள மாற்றுத்திறனாளி பிரணவ்வை நெகிழ வைத்த ரஜினி - புகைப்படங்கள் உள்ளே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kerala artist pranav met rajini poes garden house photos - ரஜினியுடன் கேரள மாற்றுத்திறனாளி பிரணவ் சந்திப்பு - புகைப்படங்கள் உள்ளே

kerala artist pranav met rajini poes garden house photos - ரஜினியுடன் கேரள மாற்றுத்திறனாளி பிரணவ் சந்திப்பு - புகைப்படங்கள் உள்ளே

கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரணவ். பிறவியிலேயே கைகளை இழந்த பிரணவ், காலால் ஓவியம் வரைவது மூலம் புகழ்பெற்றார். இந்நிலையில் கடந்த மாதம், கேரளாவில், பேரிடர் நிவாரண நிதி அளிக்க, முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்த போது, தனது காலால் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார். இது வைரலாக, பிரணவ் பிரபலமானார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க அவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.

Advertisment

publive-image

ரஜினி இதற்கு சம்மதம் தெரிவித்து 20 நிமிடம் நேரம் ஒதுக்கினார். இந்நிலையில், சென்னை போயஸ் இல்லத்தில், ரஜினி - பிரணவ் சந்திப்பு இன்று நடந்தது.

publive-image

சந்திப்பின் போது, பிரணவுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்ற ரஜினி, பிரணவின் காலை, தனது கைகளால் குலுக்கி வாழ்த்து தெரிவித்து, அவரை நெகிழ வைத்தார்.

publive-image

publive-image

தனது காலால் வரைந்த ரஜினியின் புகைப்படத்தை, அன்பளிப்பாக வழங்கிய பிரணவ், ரஜினியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Rajini Kanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment