கேரளத்தில் அண்மையில் நடந்த ஓணம் பம்பர் லாட்டரி விற்பனையில் திருப்பூரை சேர்ந்த ராணுவ வீரர் நடராஜன் என்பவருக்கு ரூ.25 கோடி பம்பர் பரிசாக விழுந்தது.
முன்னதாக நாகர்கோவிலை சேர்ந்த மருத்துவர் ஒருவரும் பம்பர் பரிசு பெற்றார். இதனால் தமிழ்நாட்டில் கேரள லாட்டரி குறித்து மக்களிடையே ஆசை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், கேரள வியாபாரிகளால் பலர் பணத்தை இழந்து வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது மக்களின் ஆசையை தூண்டும் வகையில், சமூக வலைதளங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன.
தொடர்ந்து, ஆன்லைன் மூலம் பணத்தை பெற்றுக் கொண்டு வாடிக்கையாளர்கள் விரும்பும் லாட்டரி சீட்டுகளை ஸ்கிரீன் ஷாட் மூலம் புக்கிங் செய்து மொபைல் போனில் அனுப்புகின்றனர்.
இதில், போலி லாட்டரி வியாபாரிகளும் உள்ளனர். இவர்கள் பொதுமக்களின் பணத்தை குறி வைத்து கொள்ளையடிக்கின்றனர். இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“