கேரளாவின் பேபி அணையில் 15 மரங்களை வெட்டுவதற்கு கடந்த 6ஆம் தேதி வழங்கப்பட்ட அனுமதி கடிதத்தை தமிழக அரசு வெளியிட்டது. கேரள வனத்துறை அமைச்சர் மறுப்பு தெரிவித்த நிலையில் அனுமதி கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
Advertisment
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பேபி அணையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள கேரள வனத்துறைக்கு சொந்தமான 15 மரங்களை வெட்ட தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை கேரள அரசு நிராகரித்து வந்தது.
இந்நிலையில் அந்த 15 மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத்துறை அனுமதி வழங்கியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். கேரள அரசுக்கு நன்றி தெரிவித்தும் கடிதம் அனுப்பியிருந்தார்.
ஆனால், திடீர் திருப்பமாக மரங்களை வெட்டுவதற்கான அனுமதி உத்தரவை திரும்ப பெறுவதாக கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசிந்திரன் தெரிவித்தார்.
Advertisment
Advertisements
அவர் கூறுகையில், "வனப் பாதுகாப்பு முதன்மை அதிகாரி தரப்பில் இந்த குளறுபடி நடந்துள்ளது. இது பற்றி, முதல்வர் அலுவலகம், வனம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகங்களுக்கு எதுவும் தெரியாது. மரங்களை வெட்டுவது தொடர்பான உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.
இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், "இந்த விவகாரத்தில் கேரள அமைச்சர்களும் முதல்வர் பினராயி விஜயனும் மர்மமாக உள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்குத் தெரியாமல், வனத்துறை முதன்மை பாதுகாப்பு அதிகாரியும் கேரளாவின் தலைமை வனவிலங்கு காப்பாளரும் இதுபோன்ற உத்தரவை, பிறப்பிக்க முடியும் என்பதை நம்புவது கடினமாக உள்ளது" என்றார்.
இந்நிலையில், கேரளாவின் பேபி அணையில் 15 மரங்களை வெட்டுவதற்கு கடந்த 6ஆம் தேதி வழங்கப்பட்ட அனுமதி கடிதத்தை தமிழக அரசு வெளியிட்டது. கேரள வனத்துறை அமைச்சர் மறுப்பு தெரிவித்த நிலையில் அனுமதி கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.
கேரள அரசு பேபி அணைக்கு கீழே உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு கேரள அரசு திடீரென தடை விதித்திருப்பதால், தமிழக அரசுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil