Advertisment

முல்லை பெரியாறு அணை மராமத்து பணி; கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல கேரள வனத்துறை அனுமதி

முல்லை பெரியாறு அணை மராமத்து பணிக்காக கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல கேரள வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

author-image
WebDesk
New Update
mullaiperiyar, modi, tamilnadu cm letter to modi, முல்லைப் பெரியாறு அணை, கேரளா, எடப்பாடி பழனிசாமி, மோடி

முல்லை பெரியாறு அணை மராமத்து பணி

முல்லை பெரியாறு அணை மராமத்து பணிக்காக கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல கேரள வனத்துறை அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறையின் சார்பில், ஆண்டுதோறும் முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் மராமத்து பணி மேற்கொள்ளப்படுவது வழக்கமாகும்.

Advertisment

இந்நிலையில் பொதுப்பணித்துறையின் சார்பில் டிச.4 ஆம்தேதி, தேனியில் இருந்து 2 தனியார் லாரிகளில் தளவாடப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, இடுக்கி மாவட்டம், குமுளி தாலுகா வல்லக்கடவு வழியாக முல்லைப்பெரியாறு அணை நோக்கி கொண்டு சென்றனர். 

சோதனை சாவடியில் முல்லைப்பெரியாறு அணைக்கு பொருட்கள் எடுத்துச் செல்ல கேரள வனத்துறையினரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தேனி மாவட்ட கலெக்டரால், தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச்செயலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது.

Advertisment
Advertisement

அதன்படி கேரள அரசின் மூலம் வல்லக்கடவு சோதனைச்சாவடி மற்றும் தேக்கடி படகு இறங்கு தளம் வழியாக முல்லைப்பெரியாறு அணை பகுதிக்கு கட்டுமான பொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது என்று தேனி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Theni Mullaiperiyaru
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment