scorecardresearch

இரவு நேரங்களில் முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்க வேண்டாம் – கேரள அரசு கோரிக்கை

அணை எப்போதெல்லாம் 142 அடியை எட்டுகிறதோ அப்போதெல்லாம் அணையில் இருந்து பகல் பொழுதில் நீரை வெளியேற்ற திட்டமிடுமாறு நாங்கள் தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றோம். தாமதமான நேரங்களில் பேரிடர் தணிப்பு முயற்சிகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சிக்கல்களை புறக்கணிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

Kerala government stop the order to felling trees, Mullai Periyaru baby dam, முல்லைப் பெரியாறு அணை, மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை நிறுத்தியது கேரளா, பினராயி விஜயன், முதலமைச்சர் முக ஸ்டாலின், துரைமுருகன், Duraimurugan, cm mk stalin, tamil nadu, Mullai Periyaru Dam

Tamil Nadu discharging water from Mullaperiyar dam during late hours – தமிழக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அன்று முல்லைப் பெரியாறு அணையின் 9 மதகுகளை தவறான நேரத்தில் திறந்துவிட்டதாக கேரளா அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளது.

செவ்வாய்க்கிழமை அன்று பொழுது சாய்ந்த பிறகு அளவுக்கு அதிகமான உபரி நீரை தமிழக அரசு பெரியாற்றில் திறந்துவிட்டதாக கேரளாவின் நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் கூறியுள்ளார்.

முல்லைப் பெரியாறில் இருந்து 5,650 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், வண்டிப்பெரியாறு வெள்ளக் கண்காணிப்பு நிலையத்தில் பதிவான வெள்ள அளவு 794.05 மீட்டராக உயர்ந்தது. ஆனால் இது அபாய அளவைக் காட்டிலும் வெறும் 15 செ.மீ மட்டுமே குறைவு என்று கேரள அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போது கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சூழல் ஏற்படாமல் இருக்க மத்திய நீர் ஆணையம், மேற்பார்வைக் குழுத் தலைவர் மற்றும் தமிழக அரசுக்கு தங்களின் எதிர்ப்பை முறையாக தெரிவிப்போம் என்றும் கேரள அரசு கூறியுள்ளது.

தமிழக அரசுடனான நட்புறவை பேணுவதே கேரள அரசின் முன்னுரிமை என்ற போதிலும் கேரள அரசு எழுப்பிய கவலைகள் நியாயமானது என்றும் அகஸ்டின் கூறினார்.

அணை எப்போதெல்லாம் 142 அடியை எட்டுகிறதோ அப்போதெல்லாம் அணையில் இருந்து பகல் பொழுதில் நீரை வெளியேற்ற திட்டமிடுமாறு நாங்கள் தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றோம். தாமதமான நேரங்களில் பேரிடர் தணிப்பு முயற்சிகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சிக்கல்களை புறக்கணிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

அனைத்து மதகுகள் வழியாகவும் சீராக, மழைகாலங்களில் நீரை வெளியேற்றுவது குறித்தும் தமிழக அரசு சிந்திக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை அன்று நீர் வெளியேற்றப்படாததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தமிழகத்திற்கு தண்ணீர், கேரளத்திற்கு பாதுகாப்பு என்ற மாநில அரசின் கொள்கையை மீண்டும் வலியுறுத்திய அமைச்சர் தற்போது முல்லைப்பெரியாறு அமைந்திருக்கும் இடத்தில் புதிய அணை கட்டுவதற்காக அரசு தொடர்ந்து முயற்சிக்கும் என்று கூறீனார்.

பேரிடர் தயார்நிலையின் அளவை விவரித்த அவர் பீர்மேட்டில் கட்டுப்பாட்டு மையம் செயல்படத்துவங்கியுள்ளது என்று கூறினார். பீர்மேடு, குமுளி, மஞ்சுமலை மற்றும் பெரியார் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பீர்மேட் துணைக் காவல் கண்காணிப்பாளர் (DySP) தலைமையிலான ஒரு காவல் பிரிவைத் தவிர, கேரள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின் மூன்று பிரிவுகளும், தேசிய பேரிடர் மீட்புப் படையும் (NDRF) உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Kerala government objects to tamil nadu discharging water from mullaperiyar dam during late hours