கேரள அரசு, முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டவும் மற்றும் தற்போதுள்ள அணையை இடிக்கவும் திட்டமிட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆய்வுக்கான விதிமுறைகளைக் கோரி, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்திடம் மனு அளித்துள்ளது.
முல்லை பெரியாறு அணை தமிழ்நாடு அரசால் குத்தகைக்கு எடுக்கப்பட்டு, இயக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் முல்லை பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டவும், பழைய அணையை இடிக்கவும் மத்திய அரசிடம் கேரள அரசு அனுமதி கூறியுள்ளது. கேரள அரசு ஜனவரி மாதம் முன்மொழிவை சமர்ப்பித்தது, ஆய்வுக்கு பிறகு, அமைச்சகம் அதை மே 14 அன்று நிபுணர் மதிப்பீட்டுக் குழுவுக்கு அனுப்பியது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு (நதி பள்ளத்தாக்கு மற்றும் நீர்மின் திட்டங்கள்) மே 28 அன்று திட்டமிடப்பட்ட அதன் கூட்டத்தில் கேரள அரசின் முன்மொழிவை பட்டியலிட்டுள்ளது.
தற்போதுள்ள அணையின் கீழ்நிலையில் (366 மீ) புதிய அணை திட்டம் வருவதாக கேரள அரசு தனது முன்மொழிவில் கூறியுள்ளது. தற்போதுள்ள அணை மிகவும் பழமையானது (128 ஆண்டுகள் பழமையானது) மற்றும் அணையின் கீழ் நிலையில் உள்ள பொதுமக்கள், சொத்துக்கள் மற்றும் தாவர-விலங்குகளின் பாதுகாப்பிற்காக, புதிய அணை கட்டுவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.
புதிய அணை கட்டிய பின் தற்போது உள்ள அணை இடிக்கப்படும். பெரியாறு புலிகள் காப்பகப் பகுதியில் தற்போதுள்ள அணை உள்ளது மற்றும் புதியதாக முன்மொழியப்பட்ட அணை வருகிறது.
கேரள அரசாங்கத்தின் அறிக்கை, தற்போதுள்ள அணை இடிந்து விழுந்தால், இடுக்கி திட்டத்தின் மூன்று அணைகளின் நீர்வீழ்ச்சி பாதிக்கப்படும் என்றும், மத்தியப் பகுதியின் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட மாவட்டங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் மற்றும் சொத்துக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் வாதிடுகிறது. அதேநேரம், புதிய அணை கட்டும் போதும், அணை செயல்பாட்டிற்கு வந்தப் பிறகும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான தற்போதைய ஏற்பாடு தடையின்றி தொடர்ந்து செயல்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணை கட்டப்பட உள்ள இடம் வன வனவிலங்கு சரணாலயத்தில் வன நிலத்தை குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளும் நன்மையைக் கொண்டுள்ளது என்று கேரள நீர்ப்பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் தலைமை பொறியாளர் டிசம்பர் 26 தேதியிட்ட தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முதற்கட்ட ஆய்வுகள், தற்போதுள்ள அணையின் கீழ் நீரோட்டத்திலும், கேரளாவின் எல்லையிலும் 366மீ, 622.8மீ மற்றும் 749.9மீ என மூன்று சீரமைப்புகள் சாத்தியம் என தெரியவந்துள்ளது.
மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம், நீர் வழித்தடத்தை மாற்றுதல், சாலை, ரயில் போக்குவரத்து மற்றும் நீர் குழாய் இணைப்பு பற்றிய கேள்விகளுக்கு கேரள அரசாங்கம் எதிர்மறையாக பதிலளித்தது. நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து பதிலளித்த கேரள அரசாங்கம், வழக்கு புதிய அணை கட்டுவது தொடர்பானது அல்ல, பழைய அணையின் உறுதித்தன்மை பற்றியது என்றது.
புதிய அணை தொடர்பான மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினைகள் குறித்த தனிக் குறிப்பில், மே 7 அன்று தலைமைப் பொறியாளர், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு ஆய்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்றும், புதிய அணைக்கான இடம் குத்தகைக்கு விடப்பட்ட இடத்தில் இல்லை. இந்தப் பிரச்சினை உச்சக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டதால், சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பிக்கும் போது இது தொடர்பாக பரஸ்பர ஒப்புதல் அல்லது இணக்கமான தீர்வு நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படாது என்று கூறினார்.
ஆனால், புதிய அணை கட்டுவதற்கு இரு மாநிலங்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட வேண்டும் என 2014ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் உச்ச நீதிமன்ற அணை கட்டமைப்பு ரீதியாக பாதுகாப்பானது என்று கண்டறிந்து, 142 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க அனுமதித்துள்ளது, மேலும் பேபி அணையை பலப்படுத்திய பிறகு 152 அடி வரை தேக்கி வைக்க அனுமதி அளித்துள்ளது.
இந்தநிலையில், தமிழக அரசின் அனுமதியின்றி புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.