Advertisment

முல்லைப் பெரியாறு அணை: மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை நிறுத்தியது கேரளா

தமிழக நீர்வளம், நீர்ப்பாசனம், கனிமங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்த விவகாரத்தில் கேரள அமைச்சர்களும் முதல்வர் பினராயி விஜயனும் மர்மமாக உள்ளனர். அதனால், கேரள அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பினார்.

author-image
WebDesk
New Update
Kerala government stop the order to felling trees, Mullai Periyaru baby dam, முல்லைப் பெரியாறு அணை, மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை நிறுத்தியது கேரளா, பினராயி விஜயன், முதலமைச்சர் முக ஸ்டாலின், துரைமுருகன், Duraimurugan, cm mk stalin, tamil nadu, Mullai Periyaru Dam

முல்லைப் பெரியாறு அணை அருகே மரங்களை வெட்டுவதற்கு கேரள முதன்மை வனப் பாதுகாப்பு அதிகாரி அனுமதி அளித்த நிலையில், இந்த உத்தரவு கேரள வனத்துறை மற்றும் முதலமைச்சருக்கு தெரியாமல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு என்பதால் மரங்களை வெட்ட அளித்த அனுமதியை கேரள அரசு நிறுத்தி வைத்துள்ளது.

Advertisment

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பேபி அணையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள கேரள வனத்துறைக்கு சொந்தமான 15 மரங்களை வெட்ட தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை கேரள அரசு நிராகரித்து வந்தது.

இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு, முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பேபி அணை அருகே உள்ள 15 மரங்களை வெட்ட தமிழக அரசுக்கு கேரளா அரசு அனுமதி அளித்ததையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதினார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் நன்றி தெரிவித்து கடிதம் எழுதிய பிறகே, முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மரங்களை வெட்ட கேரள முதன்மை வனத்துறை அதிகாரி அனுமதி அளித்திருப்பது முதலமைச்சருக்கும் தனக்கும் தெரிய வந்ததாக கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசிந்திரன் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் கேரள அரசு எச்சரிக்கையுடன் செயல்படும் என்று கூறினார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் கேரள அரசின் கொள்கை தொடர்பானது என்பதால் முதன்மை வனப் பாதுகாப்பு அதிகாரி சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களிடம் கேட்டு அனுமதி அளித்திருக்க வேண்டும். அவர்கள் தன்னிச்சையாக அனுமதி அளித்தது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று கூறினார். முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் அலுவலகத்துக்குகூட தெரியாமல் மரங்களை வெட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி கேரள அரசு கவனமாக் செயல்படும் என்று நேற்று (நவம்பர் 7) ஊடகங்களிடம் கூறினார்.

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் 15 மரங்களை வெட்ட கேரள முதன்மை வனப் பாதுகாப்பு அதிகாரி அனுமதி அளித்தது அரசுக்கு தெரியாமல் நடந்துள்ளது என்று அம்மாநில வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் கூறிய நிலையில், கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை பகுதியில் 15 மரங்களை வெட்ட அளிக்கப்பட்ட அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அல்லது முதலமைச்சரின் ஒப்புதலைப் பெறாமல் இந்த அனுமதி அதிகாரிகள் மட்டத்தில் அளிக்கப்பட்டது. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

இது குறித்து பதிலளித்த தமிழக நீர்வளம், நீர்ப்பாசனம், கனிமங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்த விவகாரத்தில் கேரள அமைச்சர்களும் முதல்வர் பினராயி விஜயனும் மர்மமாக உள்ளனர். அதனால், கேரள அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்குத் தெரியாமல், வனத்துறை முதன்மை பாதுகாப்பு அதிகாரியும் கேரளாவின் தலைமை வனவிலங்கு காப்பாளரும் இதுபோன்ற உத்தரவை, பிறப்பிக்க முடியும் என்பதை நம்புவது கடினமாக உள்ளது என்று துரைமுருகன் கூறினார்.

மரங்களை வெட்ட அனுமதி அளித்துவிட்டு பிறகு உத்தரவை நிறுத்தி வைக்கும் கேரளாவின் இந்த திடீர் முடிவு குறித்து “இது என்ன நிர்வாகம்” என்று வியப்பு தெரிவித்த துரைமுருகன், “அந்த உத்தரவில் முதன்மை தலைமை வனப் பாதுகாப்பு மற்றும் கேரளாவின் தலைமை வனவிலங்கு காப்பாளர், தமிழகத்தை 15 மரங்களை வெட்ட அனுமதித்தது மட்டுமல்லாமல், பட்டியலையும் இணைத்துள்ளார். வெட்டுவதற்காகக் குறிக்கப்பட்ட மரங்களின் பெயர்கள். சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் அனுமதியின்றி, இவ்வளவு விரிவான உத்தரவை எப்படி பிறப்பிக்க முடியும்?'” என்று கேள்வி எழுப்பினார்.

எதிர்கட்சிகளின் அழுத்தமே கேரள அரசின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட திடீர் மாற்றத்துக்குக் காரணமா என்று துரைமுருகன் கேள்வி எழுப்பினார். கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரனிடம் வனத்துறை சமர்ப்பித்த அறிக்கை ஒன்றில், ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1ம் தேதி கூடுதல் தலைமைச் செயலாளர் (நீர்வளம்)
ஞாயிற்றுக்கிழமை கேரள முதல்வருடன் கலந்துரையாடிய சசீந்திரன், மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை நிறுத்தி வைக்க அம்மாநில வனத்துறை செயலாளரை வலியுறுத்தினார்.

மேலும், உண்மைகளை மறைப்பதாக எதிர்க்கட்சிகள் எல்.டி.எஃப் அரசாங்கத்தை குற்றம் சாட்டியபோது அமைச்சர் சசீந்திரன் புதிய உத்தரவு மூலம் தமிழக அதிகாரிகளுக்கு இதுபற்றித் தெரிவித்தார்.

“தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வந்ததும் இந்த விவகாரம் தனது அலுவலகத்திற்கு தெரிய வந்தது. இந்த முக்கியமான முடிவு குறித்து முதலமைச்சருக்கோ அல்லது நீர்வளத்துறை அமைச்சருக்கோ தெரிவிக்கப்படவில்லை என்பதை விவாதங்களில் இருந்து புரிந்துகொண்டேன். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என சசீந்திரன் கூறினார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, முல்லைப் பெரியாறு பேபி அணையை பலப்படுத்த 15 மரங்களை வெட்ட தமிழகத்திற்கு அனுமதி அளித்ததற்கு நன்றி என்று பினராயி விஜயனுக்கு ஸ்டாலின் சனிக்கிழமை கடிதம் எழுதினார்.

இந்த உத்தரவின் உள்ளடக்கத்தை, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வனவிலங்கு) மற்றும் கேரளாவின் தலைமை வனவிலங்கு காப்பாளர், ஏ.பி.சுனில் பாபு, துணை இயக்குனர் (புலிகள்), தேக்கடி, பெரியார், டபிள்யூஆர்டி செயல் பொறியாளர் ஜே சாம் எர்வினுக்கு தெரிவித்தார். அணை சிறப்புப் பிரிவு, கம்பம் நவம்பர் 6, 2021 அன்று ஒரு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேபி அணையை பலப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 0.25 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள 23 மரங்களை வெட்ட வேண்டும் என தமிழ்நாட்டின் கம்பம் நிர்வாக பொறியாளர் கோரிக்கை வைத்ததை இந்த உத்தரவு நினைவுபடுத்துகிறது. சுமார் 40 சென்ட் பரப்பளவில் உள்ள 15 மரங்களை அகற்ற, பெரியாறு புலிகள் காப்பக கிழக்குப் பிரிவு துணை இயக்குநர் பரிந்துரைத்ததையும் மேற்கோள் காட்டியுள்ளது.

இந்த உத்தரவை பிறப்பித்த கேரள வனத்துறை முதன்மை தலைமை காப்பாளரும், வனவிலங்கு காப்பாளருமான பென்னிச்சன் தாமஸ், அணை அதிகாரிகளிடம் இருந்து மரக்கட்டைகள் மற்றும் விறகுகளை பெற்று அதை உருவாக்குமாறு பெரியார் புலிகள் காப்பகம் கிழக்கு கோட்ட துணை இயக்குனருக்கு உத்தரவிட்டார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamil Nadu Mullaiperiyaru Kerala Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment