கேரளா நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள்: உறவினர்கள் கண்ணீர்

தமிழகஅரசின் செய்திமக்கள் துறை உதவிஇயக்குனர் உன்னிகிருஷ்ணன் முழுவிபரங்களையும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவித்து, அப்பகுதிக்கு செல்பவர்களுக்கு இ-பாஸ் கிடைப்பதற்கும் ஆவன செய்துவருகிறார்

கேரள மாநில இடுக்கி மாவட்டத்தில் மூணாறு அருகே, ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இறந்தவர்களில் பலர், தமிழகத்தின் கயத்தாறு பகுதியை சேர்ந்தவர்கள் என்ற செய்தி கயத்தாறு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நிலச்சரிவில், உயிரிழந்த அனைவரும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது. கேரளாவில்,  தென்மேற்கு பருவமழையால்  பெட்டிமூடி தேயிலை தோட்டத்தில்மண் சரிவு ஏற்பட்டது. தூத்துக்குடி கயத்தாறு பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் உட்பட 86 குடியிருப்புகள் இருந்ததாக கேரள மாநில வனத்துறையினர் தெரிவித்திருந்தனர்.

 


தூத்துக்குடி மக்களவைத் தொகுதி எம்,பி கனிமொழி தனது ட்விட்டரில், ” கேரளாவில் மண்சரிவினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிர்ச்சியடைய வைக்கின்றன. இறந்தவர்களில் பலர், தமிழகத்தின் கயத்தாறு பகுதியை சேர்ந்தவர்கள். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள். தொடர் சோகங்களை சந்தித்து வரும் கேரள மக்கள், துவண்டு விடாமல் இச்சூழலை உறுதியோடு எதிர்கொள்ள வேண்டும். மத்திய அரசு வழக்கம் போல தாமதிக்காமல், கேரளாவுக்கு உடனடி உதவிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும்” பதிவிட்டுள்ளார்.

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வெளியிட்ட செய்திக்குறிப்பில், ” கேரளா – மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட கோவில்பட்டி தொகுதி கயத்தாரை சேர்ந்தவர்களின் விபரங்களை கேரளாவில் பணியாற்றி வரும் தமிழகஅரசின் செய்திமக்கள் துறை உதவிஇயக்குனர் உன்னிகிருஷ்ணன் முழுவிபரங்களையும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவித்து, அப்பகுதிக்கு செல்பவர்களுக்கு இ-பாஸ் கிடைப்பதற்கும் ஆவன செய்துவருகிறார். தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்ததோடு மட்டுமில்லாமல், கேரளா முதல்வர்  அவர்களை தொடர்பு கொண்டு இறந்தவர்களின் உடலை உடனடியாக மீட்ப்பதற்கும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு முறையான, தரமான சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்” என்று தெரிவித்தார்.

பாஜக தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டரில்,” கேரளா இடுக்கி மாவட்டத்தில் நடந்த நிலச்சரிவு விபத்தில், கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் 80 பேர் நிலைமை என்னவென்று தெரியாத நிலை உள்ளது. இந்நேரத்தில் அத்தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இரு மாநில அரசுகளும் தேவையான உதவிகளை செய்திட வேண்டும்” என்று பதிவிட்டார்.

 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kerala idukki landslide tamil nadu kayatharu people missing kerlala landslide news

Next Story
சென்னையில் குறைகிறது; பிற மாவட்டங்களில் கூடுகிறது: கொரோனா ரிப்போர்ட்coronavirus daily media bulletin
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com