கேரளாவில் ஓடும் ரயிலில் பயணி ஒருவர் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 3 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ரயிலில் பயணித்த பயணிகள் 8 பேர் தீ காயங்களுடன் மீட்டகப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை இரவு ஆலப்புழா - கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயில் கோழிக்கோடு அருகே வந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றது. இது குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தீவிரவாதிகள் செயலாக இருக்குமா என்ற கண்ணோட்டத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்தநிலையில் உத்தரப் பிரசேதத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், கேரளாவின் அண்டை மாநிலமான கன்னியாகுமரியில் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். நாகர்கோவில் குழித்துறை உள்ளிட்ட முக்கிய ரயில்வே நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் ரயில்வே நிலையங்களுக்கு வரும் பயணிகளை அவர்கள் உடமைகளையும் முழுமையாக சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.
செய்தி: த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“