கேரளாவில் துப்பாக்கிச் சூட்டில் தப்பிய மாவோயிஸ்டுகளை பிடிக்க கோவை- கேரளா எல்லை பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கேரள மாநிலம் கண்ணூரில் போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடத்து. இதில் எட்டு மாவோயிஸ்டுகள் அங்கு இருந்து தப்பினர்.
இதை அடுத்து கேரளா, தமிழகம், கர்நாடகா எல்லைகளில் அந்தந்த மாநில போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி தப்பியவர்களை தேடி வருகின்றனர்.
இதனிடையே போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த இரண்டு பெண் மாவோயிஸ்டுகள் தலச்சேரி பகுதியில் இருந்து பேருந்து மூலம் தப்பியதாக கேரளா உளவு பிரிவு அறிவிப்பு வெளியிட்டது.
/indian-express-tamil/media/media_files/iADV2UDjhTAJ1zSIr4FK.jpeg)
/indian-express-tamil/media/media_files/hnFn8newGM5NJ0306sdO.jpeg)
இதனால் கோவை எல்லையான வாளையார், வேலந்தாவளம், மாங்கரை உள்ளிட்ட அனைத்து சோதனை சாவடிகளிலும் வாகன சோதனை தீவிர படுத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தப்பிய பெண் மாவோயிஸ்டுகள் சிகிச்சை பெற எல்லையோர மருந்தகம் மற்றும் மருத்துவமனைகளுக்கு வரலாம் என்ற சந்தேகம் அடிப்படையில் போலீசார் சாதாரண உடைகளிலும் கண்காணித்து வருகின்றனர். மேலும் மருந்தகம், மருத்துவர்களிடம் சந்தேகத்திற்கு உரிய வகையில் யாராவது வந்தால் தகவல் அளிக்க அறிவுறுத்தி உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“