kerala maoist leader manivasagam born in tamilnadu kerala maoist police encounter recent news
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் அகாலி வனப்பகுதியில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நான்கு பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இதில் கேரளா மாவோயிஸ்டின் தலைவர் மணிவாசகமும் அடங்கும். இவர் மீது தமிழ்நாட்டில் ஏற்கனவே நான்கு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருந்தது. ஒன்றில் நிரபராதி என்றும் நிரூபணமாகியுள்ளது.
Advertisment
கேரளாவில், கடந்த மூன்று ஆண்டுகளில் கொல்லப்பட்ட ஏழு மாவோயிஸ்டுகளில் ஆறு பேர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
1963 ஆம் ஆண்டில் பிறந்த மணிவாசம் தமிழ்நாட்டின் சேலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் . நன்கு படிப்பறிவுக் கொண்டவர். விலங்கியல் துறையில் பிஎஸ்சி பட்டமும், ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர். ஆனால், தனது இருபது வயது நடுப்பகுதியில் புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தார்.
தமிழகத்தின் வளர்ச்சியடையாத பகுதியான கிருஷ்ணகிரியில் மாவோயிச நடவடிக்கைகளை முன்னின்று நடத்தியவர். விவசாயிகளின் வாழ்க்கை மேம்படுத்த 'உழவர் உழைப்பாளி மாமன்றம்' என்பதையும் நிர்வகித்தியுள்ளார் .
ஊத்தங்கரை குண்டுவெடிப்பு வழக்கில் மணிவாசகத்தை 2002ம் ஆண்டு முதன் முதலில் கைது செய்தனர். 2008 -ம் ஆண்டு விடுதலையான மனிவாசகம் அன்று முதல் தலைமறைவானார்.
கேரளா மாவோயிஸத்தின் முக்கிய நபராக கருதப்பட்ட குப்பு தேவராஜ் போலிஸாரால் சுடப்பட்ட பின்னர் மனிவாசகம் மாவோயிஸத்தை நிர்வகிக்கும் தலைவர் ஆனார். கேரளாவில் கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, பாலக்காடு , மலப்புரம் ஆகிய வடக்கு மாவட்டங்களில் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ மாவோயிச நடவடிக்கைகள் நடைபெற்றன . இதன் வெளிப்பாடாக வயநாடு, மலப்புரம், பாலக்காடு போன்ற மாவட்டங்கள் மத்திய அரசின், இடதுசாரி தீவிரவாதத்தால் (எல்.டபிள்யூ.இ) பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டன.