முல்லைப் பெரியாறில் 13 மரங்களை வெட்ட தமிழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட விவகாரத்தில் கேரளா எச்சரிக்கையுடன் செயல்படும் என அம்மாநில வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறில் அணையை பலப்படுத்துவதற்காக மரங்களை வெட்ட தமிழகத்துக்கு கேரள தலைமை வனவிலங்கு காப்பாளர் அனுமதி அளித்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சசீந்திரன், வனத்துறை அதிகாரிகளின் அறிக்கைக்காக காத்திருப்பதாக கூறினார். எந்த சூழ்நிலையில் அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முல்லைப் பெரியாறு பேபி அணைப் பகுதியில் அணையைப் பலப்படுத்துவதற்காக மரங்களை வெட்ட வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை கேரளா பலமுறை நிராகரித்தது.
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு பேபி அணைக்கு கீழ் உள்ள் 13 மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத்துறை அனுமதி அளித்ததையடுத்து, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் எழுதினார்.
முல்லைப் பெரியாறில் 13 மரங்களை வெட்ட தமிழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள விவகாரத்தில் கேரளா எச்சரிக்கையுடன் செயல்படும் என வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், “எனக்கு தெரிந்த வரையில், முதலமைச்சருக்கோ அல்லது அவரது அலுவலகத்திற்கோ விஷயங்கள் தெரியாது” என்று சசீந்திரன் கூறினார்.
முல்லைப் பெரியாறில் அணையை பலப்படுத்துவதற்காக மரங்களை வெட்ட தமிழகத்துக்கு கேரள தலைமை வனவிலங்கு காப்பாளர் அனுமதி அளித்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சசீந்திரன், இந்த விவகாரம் குறித்து, வனத்துறை அதிகாரிகளின் அறிக்கைக்காக காத்திருப்பதாக கூறினார். எந்த சூழ்நிலையில் அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து வனத்துறை அதிகாரி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து நன்றி தெரிவிக்கும் கடிதம் வந்தபோது கேரள முதல்வருக்கு இந்த விவகாரம் தெரிய வந்தது என்பது தெளிவாகிறது. முல்லைப் பெரியாறில் 13 மரங்களை வெட்ட தமிழக அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள விவகாரத்தில் கேரளா எச்சரிக்கையுடன் செயல்படும் என வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து வனத்துறையினர் விளக்கமளித்த பின்னர், முதலமைச்சர் இந்த பிரச்சினையை கவனமாகக் கையாள பரிந்துரைத்துள்ளார்” என்று கூறினார்.
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத்துறை தமிழக அரசுக்கு அனுமதி அளித்துள்ளது என்ற செய்தி வெளியான நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் சட்டப்போராட்டத்தில் மாநில நலன் காக்க அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
சசீந்திரனின் கூறுகையில், அண்டை மாநிலமான தமிழ்நாட்டுடன் கேரளா மிகவும் அன்பான மற்றும் நட்பான உறவைக் கொண்டுள்ளது. எனவே, இந்த பிரச்சினையை கவனமாகக் கையாள வேண்டும். கேரள முதல்வருடன் கலந்து ஆலோசித்து எதிர்கால நடவடிக்கை குறித்து வனத்துறை முடிவு செய்யும் என்றார்.
தலைமை வனவிலங்கு காப்பாளரால் அறிவிக்கப்பட்ட மரம் வெட்டுவதற்கான அனுமதி குறித்து, சசீந்திரன், கொள்கை முடிவு சம்பந்தப்பட்டதால் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து மட்டுமே அதிகாரிகள் முடிவு எடுத்திருக்க வேண்டும் என்றார். சாதாரண போக்கில், மரங்களை வெட்டுவதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்யலாம். இருப்பினும், இது முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு என்பதால், இந்தச் செயலில் அரசின் ஆலோசனையைப் பெற்றிருக்க வேண்டும். வனத்துறை அதிகாரியிடம் இருந்து முதற்கட்ட அறிக்கை பெற்ற பின், தேவைப்பட்டால், அரசு விசாரணைக்கு உத்தரவிடலாம் என்று தெரிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”