கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவையில் கேரள எல்லைப் பகுதியான வாளையாறு சோதனைச் சாவடியில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கேரளாவில் நிபா வைரஸ் தாக்கப்பட்டு பலர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் அங்கு நிபா வைரஸ் பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
/indian-express-tamil/media/media_files/BvX9WdhzkkOoQDFW2WQ5.jpeg)
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு-கேரளா எல்லைப் பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் கேரள எல்லை பகுதியான வாளையாறு சோதனை சாவடியில், கேரளாவில் இருந்து வரும் மக்களுக்கு உடல் வெப்பநிலை சோதனை செய்யப்படுகிறது. மேலும் பேருந்துகளில் வரும் மக்களும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/ItJANFVR6WokHjgFlY7v.jpeg)
அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் கோவையில் எங்கு செல்கின்றார்கள் எனவும் அதிகாரிகள் கேட்டறிந்து கொள்கின்றனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“