தமிழகத்தில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை தடை செய்யப்பட்டிருந்தாலும் அண்டை மாநிலமான கேரளாவில் அவ்வப்போது லாட்டரி டிக்கெட்டுகளில் தமிழர்கள் வெற்றி பெற்று பரிசுத்தொகையை அள்ளி வருகின்றனர். அந்த வகையில் தற்போது திருப்பூரை சேர்ந்த சேர்ந்தவர்களுக்கு ஓணம் பண்டிகையின் பம்பர் பரிசாக ரூ25 கோடி வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூரை சேர்ந்த பாண்டியராஜ், நடராஜன், குப்புசாமி மற்றும் ராமசாமி ஆகிய நான்கு சொந்தக்காரர்கள் சேகரித்த டிக்கெட்டுக்கு முதல் பரிசு ரூ25 கோடி கிடைத்துள்ளது. இந்த பரிசை வென்ற நடராஜன் பாலக்காடு வாளையாரில் குருசுவாமி, பாவா ஏஜென்சி, மூலம் விற்பனை செய்து, ஷீஜா என்ற ஏஜென்ட் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.
இதன் மூலம் கடந்த ஓராண்டில் நடத்தப்பட்ட 7 பம்பர் டிக்கெட்டுகளில் மான்சூன், கிறிஸ்துமஸ் மற்றும் நேற்றைய திருவோணம் உள்ளிட்ட 3 பம்பர் முதல் பரிசுகளை பாலக்காடு வென்றது. தற்போது ஓணம் பண்டிகை பம்பர் பரிசாக 25 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் ஏஜென்சி கமிஷன் (10%) - 2.5 கோடியும், மீதமுள்ள 22.5 கோடி பரிசு வரி (30%)- 6.75 கோடியும். பம்பர் ஹிட்மேன் கணக்கிற்கு 15.75 கோடியும் (37%*) வரித் தொகையில் செலுத்தப்படுகிறது.
இதில் சுகாதாரக் கல்வி வரி (4%) மற்றும் கூடுதல் கட்டணம் உட்பட 36,99,000 செலுத்தப்படும். கணக்கில் உள்ள தொகையின் மொத்த வரி -2.85 கோடிகள். அனைத்து வரிகளுக்கும் பிறகு இருப்பு - ரூ.12,88,26,000 பரிசுபெற்றவர்களுக்கு வழங்கப்படும். வருமான வரியை பொறுத்தவரை 1 கோடியிலிருந்து 2 கோடி வரை 15%, 5 கோடி வரை 25%, அதன்பிறகு பிறகு 37% வரி செலுத்த வேண்டும். இந்தத் தொகை லாட்டரித் துறையால் வசூலிக்கப்படுவதில்லை. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“