கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மின்சார ஊழியர்கள் குடியிருப்பு பகுதிக்கு ஒற்றை காட்டு யானை சுள்ளி கொம்பன் வந்ததால், மின்சார ஊழியர்கள் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
கோவை மாவட்டத்தில், ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வன சரக பகுதிக்கு உட்பட்ட கவி அருவி, ஜீரோ பாயிண்ட், நவமலை, ஆழியார், வால்பாறை சாலை, ஆதாளியம்மன் கோவில் பகுதிகளில் வன விலங்குகள் அதிக நட மாட்டம் உள்ள பகுதியாகும், வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வாகனங்கள் கொண்டு சூழற்ச்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கேரளா நெல்லியம்பதி வனப்பதிலிருந்து வந்த சுள்ளி கொம்பன் பட்டர்பிளை பார்க் மற்றும் ஆழியார் அணை ஓரம் மற்றும் பிற பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடமாடி வருகின்றது. இதையடுத்து நவமலை மின்சார ஊழியர்கள் குடியிருக்கும் பகுதி வந்த காட்டு யானை இரவில் நடமாடுவதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இந்த யானை மீது சில நாட்களுக்கு முன்பு வாகனங்களை சேதப்படுத்தி மின்சார ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சுறுத்தலை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“