பி.ரகுமான் – கோவை மாவட்டம்
கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் மூன்று தமிழ் படங்களில் பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு அறிமுகமான மந்திரவாதி ஒருவர் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்துள்ளார். அதேபோல் செல்வம் கொழிக்கும் என்றும் கூறியுள்ளார்.
இதை ராதாகிருஷ்ணன் உண்மை என நம்பி வீட்டிலே கஞ்சா செடியை வளர்த்து உள்ளார். அருகில் குடியிருப்பவர்கள் கொடுத்த புகாரின் பேரில் கலால் சிறப்பு பிரிவு ஆய்வாளர் அஜித் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 5 மாதமான கஞ்சா செடிகளை, 20 பைகளில் வளர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தனர். இதனையடுத்து ராதாகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
#WATCH || கேரளா: மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு வீட்டில் கஞ்சா செடி வளர்த்த பின்னணி பாடகர் கைது!https://t.co/gkgoZMIuaK | #Kerala | #Police | #Kanja pic.twitter.com/DYbD1p9Cjz
— Indian Express Tamil (@IeTamil) August 4, 2022
— Indian Express Tamil (@IeTamil) August 4, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil