scorecardresearch

சேலம்: ஆளுனர் படத்தை அவமரியாதை செய்தவர் மீது வழக்கு; பா.ஜ.க மறியல்

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த ஆளுநர் ரவியின் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்த கலீல் ரஹ்மான் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

rn ravi
ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தொடர்ந்து வரும் குற்றச்சாட்டினால் அரசியல் தலைவர்கள் உட்பட பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், சமீபத்தில் திராவிட மாடல் பற்றி அவதூறாக பேசியதால் பலர் தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், பலர் ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தற்போது, சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த ஆளுநர் ரவியின் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து போராட்டம் நிகழ்த்தப்பட்டது. இந்த செயலில் ஈடுபட்ட கலீல் ரஹ்மான் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனை கண்டித்து பாஜக மாவட்ட தலைவர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 28 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Khalil rahman arrested for protesting against governor rn ravi

Best of Express