வேல் யாத்திரைக்காக சென்ற குஷ்பு கார் விபத்து… முருகன் அருளால் தப்பித்தேன் என ட்வீட்!

விபத்தை தொடர்ந்து, குஷ்பு தனது பயணத்தை மீண்டும் தொடர்ந்துள்ளார்.

By: Updated: November 18, 2020, 10:43:37 AM

Khushbu car accident Khushbu sundar twitter : பாஜகவின் வேல் யாத்திரையில் கலந்து கொள்ள சென்ற நடிகையும், சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு வின் கார் விபத்துகுள்ளானது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

சென்னையில் இருந்து கடலூருக்கு வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக நடிகை குஷ்பு இன்று காரில் புறப்பட்டு சென்றார்.அப்போது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பு சென்ற கார் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

மதுராந்தகம் அருகே கார் சென்ற போது பாண்டிச்சேரி நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று குஷ்புவின் காரை முந்திச்செல்ல முயன்றது. அப்போது குஷ்பு சென்ற கார் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது. காரின் கண்ணாடி உடைந்தது. குஷ்புவிற்கு இலேசான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த குஷ்பு, தான் தனது கணவர் கும்பிடும் கடவுள் முருகன் அருளினால் தப்பியதாக கூறினார்.

இந்த விபத்து குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுருந்த குஷ்பு, முருகனின் அருளால் தான் பிழைத்ததாகவும் கார் விபத்துகுள்ளான படத்தையும் வெளியிட்டுள்ளார்.விபத்தை தொடர்ந்து, குஷ்பு தனது பயணத்தை மீண்டும் தொடர்ந்துள்ளார்.

கடலூரில் நடைபெறும் வேல்யாத்திரையில் கலந்து கொள்ள செல்கிறார். குஷ்புவின் அரசியல் நண்பர்கள், சினிமா வட்டாரங்கள் பலரும் அவரை தொடர்பு கொண்டு நலம் விசாரித்து வருகின்றனர்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Khushbu car accident khushbu sundar twitter khushbu accident velyatra khushbu sundar news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X