பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 7-ம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பா.ஜ.க தலைவியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு சுந்தர் தி.மு.க அரசை கடுமையாக சாடியுள்ளார்.
அவர் தனது X பக்கத்தில் கூறுகையில், "தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நாய்களாக போய்விட்டது. கள்ளச் சாராயம், போதைப் பொருள், கற்பழிப்பு, பட்டப்பகலில் நடக்கும் கொலைகள் வரை சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. குற்றம் செய்பவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள், அதன் பின் அவர்கள் சுதந்திரமாக வெளியே வருகிறார்கள்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கொலை முதல் பாமக நிர்வாகி கொலை வரை இது இன்னும் முடியவில்லை. முதல்வர் ஸ்டாலின் இந்த பிரச்சனைகளில் மவுனம் காப்பது நீங்கள் எவ்வளவு திறமையற்றவர் என்பதை காட்டுகிறது" என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“