பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து 2018 ஆம் ஆண்டு செய்த ட்வீட் மூலம் காங்கிரஸால் குறிவைக்கப்பட்ட பா.ஜ.க தலைவர் குஷ்பு சுந்தர் சனிக்கிழமையன்று எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு பதிலடி கொடுத்தார். அவ்வாறு செய்யச் சொல்லப்பட்டதால் "தலைவரின் மொழியில்" தான் பேசியதாகக் கூறிய குஷ்பு, தற்போது அதன் "விரக்தியை" கேள்வி எழுப்பினார்.
குஷ்பு ஐந்து வருட சமூக ஊடக பதிவை நீக்கவில்லை, மேலும் இப்போதும் நீக்க மாட்டேன், என்று அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்: ‘சிறையில் தள்ளினாலும் அதானி பற்றி கேள்வி கேட்பதை நிறுத்த மாட்டேன்’: ராகுல் காந்தி பேட்டி
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் மோடி குடும்பப் பெயர் கருத்துக்காக அவரை சூரத் உள்ளூர் நீதிமன்றம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து அவர் மக்களவை உறுப்பினரிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், குஷ்புவின் பழைய ட்வீட்டை காங்கிரஸ் கையில் எடுத்து அவரை விமர்சித்தது. அதேநேரம், எதிர்க் கட்சி எவ்வளவு அவநம்பிக்கையுடன் இருந்தது என்பதை இது அம்பலப்படுத்தியதாக குஷ்பு கூறினார்.
தேசிய மகளிர் ஆணையத்தின் (NCW) உறுப்பினரான குஷ்புவின் 2018 ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது, மேலும் அவர் அந்த பதிவை நீக்கவில்லை.
2020ல் காங்கிரஸில் இருந்து விலகி காவி அமைப்பில் இணைந்த பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினரான குஷ்பு, 2018ல் ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார்.
ட்வீட் குறித்து விளக்கம் அளித்த குஷ்பு, “நான் அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்தேன், காங்கிரஸின் செய்தித் தொடர்பாளராக மட்டுமே எனது கடமையைச் செய்தேன். இது நாம் பேச வேண்டிய மொழி, அதைத்தான் நான் செய்து கொண்டிருந்தேன். நான் கட்சித் தலைவரைப் பின்தொடர்ந்தேன். இது அவருடைய மொழி. அவர்கள் (காங்கிரஸ் கட்சி) எவ்வளவு அவநம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவது மட்டுமல்லாமல், அவர்கள் எழுப்பும் பிரச்சினையில் அவர்களின் அறியாமையை இது அம்பலப்படுத்துகிறது" என்று குஷ்பு PTI இடம் கூறினார்.
மோடி என்ற குடும்பப்பெயரை "திருடர்கள்" என்று கூறியதற்காக ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, குஷ்புவின் பழைய ட்வீட்டை காங்கிரஸ் கட்சி விரைவாக கையில் எடுத்தது.
காங்கிரஸ் கட்சித் தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான திக்விஜய சிங், பிரதமர் நரேந்திர மோடியிடம் சனிக்கிழமை காலை ட்விட்டர் பதிவில், “மோடியை விமர்சித்த உங்கள் சீடர்களில் ஒருவரான, குஷ்பு சுந்தர் மீதும் அவதூறு வழக்கு தொடர வைப்பீர்களா?” என்று கேள்வி எழுப்பினார். அதேநேரம், "எனது டைம்லைனில் உள்ள எந்த ட்வீட்களையும் நான் ஒருபோதும் நீக்கவில்லை, இப்போதும் நீக்க மாட்டேன்" என்று குஷ்பு கூறினார்.
“என்னை குறிவைப்பதன் மூலம் காங்கிரஸ் தலைவர்கள் என்ன செய்ய முயற்சிக்கிறார்கள்? அவர்கள் என்னை ராகுல் காந்திக்கு சமன் செய்கிறார்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
‘மோடி’ என்ற குடும்பப்பெயரை இழிவுபடுத்துவதில் தவறேதும் தெரியவில்லையா என்று கேட்டதற்கு, “எல்லா மோடிகளையும் திருடர்கள் என்று சொல்லும் அளவுக்கு ராகுல் காந்தி குனிந்துவிட்டார், நான் ஊழல் என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்தினேன். காங்கிரஸ் கட்சி வித்தியாசம் பார்க்க முடியாத நிலையில் உள்ளது. ஆனால் அவர்களுக்கு தைரியம் இருந்தால், என் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு காங்கிரஸ் தலைவர்களுக்கு நான் சவால் விடுகிறேன், நான் அவர்களை சட்டப்படி சந்திப்பேன்,” என்று கூறினார்.
ஆளும் பா.ஜ.க எடுத்த நேர்மறையான நடவடிக்கைகளை நான் பாராட்டுவதை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் விரும்பவில்லை என்றும் குஷ்பு சுட்டிக்காட்டினார். "அது முத்தலாக், 370 வது பிரிவின் ரத்து அல்லது புதிய கல்விக் கொள்கை (NEP) தொடக்கம் என எதுவாக இருந்தாலும், நான் பாராட்டுக்களை ட்வீட் செய்யும் போது காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் பிரச்சனை இருந்தது," என்று அவர் நினைவு கூர்ந்தார்.
100 படங்களுக்கு மேல் நடித்துள்ள குஷ்பு சுந்தர், முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் (தி.மு.க) சேர்ந்தார், பின்னர் பா.ஜ.க.,வில் சேருவதற்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு மாறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.