Advertisment

அரசியலுக்கு முன்னும் பின்னும், விமர்சனங்களுக்கு தயங்காத குஷ்பு சுந்தர்

எப்போதும் பெண்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பும் குஷ்பு, பாலியல் தொற்றுநோய் மற்றும் எதிர்பாராத கர்ப்பத்தைத் தடுக்க உதவும் வகையில் பள்ளிகளில் பாலியல் கல்வியை வலியுறுத்தினார்.

author-image
WebDesk
New Update
Khushbu-Sundar

New member of National Commission for Women Khushbu Sundar, in New Delhi. (PTI)

 Arun Janardhanan

Advertisment

ஆன்லைன் செய்தி இணையதளமான மோஜோ ஸ்டோரியின் நிகழ்ச்சியில் பேசிய குஷ்பு, எட்டு வயதில் தான் பாலியல் வன்கொடுமைக்கு  ஆளானதாகவும், 15 வயது வரை அதை அமைதியாகச் சகித்ததாகவும் கூறினார்.

“ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்படும்போது, ​​அது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் வடுவை ஏற்படுத்துகிறது; அவர்கள் ஆணா பெண்ணா என்பது முக்கியமல்ல. அதிலிருந்து பலரால் வெளியே வர முடியவில்லை,” என்று சமீபத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்ட குஷ்பு கூறினார்.

எப்போதும் பெண்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பும் குஷ்பு, பாலியல் தொற்றுநோய் மற்றும் எதிர்பாராத கர்ப்பத்தைத் தடுக்க உதவும் வகையில் பள்ளிகளில் பாலியல் கல்வியை வலியுறுத்தினார்.

அவர் தனது 13 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் திமுக, காங்கிரஸ் இப்போது பாஜகவுக்கு மாறியிருந்தாலும், இதுபோன்ற பிரச்சினைகளில் அவரது கருத்துக்கள் மாறவில்லை.

மும்பையில் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த 52 வயதான குஷ்பு, 1980களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கினார். ஆனால் தென்னிந்திய சினிமாவில் தான் அவர் பல பிளாக்பஸ்டர்களில் தோன்றி நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். அவரது பல படங்களில், ஆணாதிக்க ஒடுக்குமுறை மற்றும் சமூகத்தின் தரங்களுக்கு எதிராக போராடும் வலுவான தைரியமுள்ள, சுதந்திரமான பெண்ணாக நடித்தார்.

தமிழ்நாட்டு ரசிகர்கள் அவருக்கு கோயில் கட்டும் அளவுக்கு அவருடைய புகழ் அப்படி இருந்தது.

குஷ்புக்க்கு நெருங்கிய தோழியாக பழகிய நடிகை ஒருவர், அவரது ரசிகர்கள் எப்போதும் தீவிர விசுவாசமாக இருந்தனர், என்றார். முரண்பாடாக, குஷ்பு தன்னை ஒரு "நம்பிக்கை இல்லாதவர்" என்று வெளிப்படையாக அடையாளப்படுத்திய போதிலும் இது நடந்தது.

அவரது அரசியல் பிரவேசத்திற்கு முன்பே, குஷ்பு தனது கருத்துக்களால் சர்ச்சையில் சிக்கினார். 2005ஆம் ஆண்டு தமிழில் அளித்த பேட்டியில், திருமணத்தின் போது பெண் கன்னியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து நம் சமூகம் வெளியே வர வேண்டும், என்று கூறினார்.

அவரது கருத்துக்களைத் தொடர்ந்து அவர் மீது 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, மேலும் அவர் மறைந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 2010 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உச்ச நீதிமன்றம் அவரை விடுவிக்கும் வரை, குஷ்பு ஐந்தாண்டுகள் போராடினார்.

அதே ஆண்டு, அவர் தி.மு.க.வில் சேர்ந்தார், மறைந்த கட்சித் தலைவரான மு. கருணாநிதி, அவரது முற்போக்குக் கருத்துக்களுக்கு பெயர் பெற்ற ஒரு நபராக அவரை கட்சியில் வரவேற்றார்.

தி.மு.க.வைப் பொறுத்தவரை, குஷ்பு சமூக சீர்திருத்தவாதி பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட திரைப்படத்தில், அவரது மனைவி மணியம்மையாக நடித்ததற்கு குஷ்பு மிகவும் பொருத்தமானவர்.

இருப்பினும், 2014 ஆம் ஆண்டில், குஷ்பு திமுகவில் ஓரங்கட்டப்பட்டதை உணர்ந்ததால் காங்கிரஸுக்கு சென்றார். 2014 மக்களவைத் தேர்தல் மற்றும் மே 2016 சட்டமன்றத் தேர்தல் ஆகிய இரண்டிலும் தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணியின் முக்கிய பிரச்சாரகராக இருந்தார். அந்த நேரத்தில் தென் தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக அவர் நடத்திய திறம்பட பிரச்சாரத்திற்காக திமுகவின் உயர்மட்ட தலைவர்கள் கூட அவரை பாராட்டினர்.

இதற்கு மாறாக குஷ்பு பா.ஜ.க.வுக்கு சென்றது ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முன்பு அவர் ஆன்லைனில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களை அடிக்கடி விமர்சித்து வந்தார். ஒருமுறை அவர் ட்விட்டரில் தனது பெயர் மற்றவர்களுக்கு குஷ்பு சுந்தர் என்றும், அது “பிஜேபிக்கு நகத் கான்” என்றும் பதிவிட்டார்.

அந்த நேரத்தில் வலதுசாரி ஆதரவாளர்கள், அவரது அசல் பெயர் மற்றும் அடையாளத்தை அடிக்கோடிட்டு தாக்கினர்.  அப்போது, ​​மதத்தின் அடிப்படையில் மக்களை அடையாளம் காண்பது குறித்து, பாஜகவிடம் குஷ்பு கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டிலோ அல்லது பல முக்கியத் தலைவர்களோ இல்லாத பாஜகவிற்கு, குஷ்பு ஆங்கிலம் உள்ளிட்ட மொழியின் மீதான தனது திறமை, பேச்சாற்றல், வலுவான கருத்துக்கள் கொண்ட தலைவர் என்ற நற்பெயர் ஆகியவற்றால் இப்போது மதிப்புமிக்க கூடுதலாக இருக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment