/indian-express-tamil/media/media_files/BPsPC5VEsWW1LmYjTYsT.jpg)
'நான் சாகும் வரை முஸ்லீம் தான். நான் என் மதத்தை மாற்றவில்லை, எப்போதும் மாறவும் மாட்டேன்’; சமூக வலைதளத்தில் வைரலாகும் குஷ்பூவின் பதிவு
உங்களை பொறுத்தவரை ஆன்மீகம் மதம் சார்ந்தது. என்னைப் பொறுத்தவரை ஆன்மீகம் என்பது ஒருமைப்பாடு பற்றியதுஎன நடிகையும் பா.ஜ.க உறுப்பினருமான குஷ்பூ தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 90களில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். பா.ஜ.க கட்சியில் இணைந்து செயல்படும் குஷ்பூ, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
இந்தநிலையில், குஷ்பூ அயோத்தியில் நடந்த ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்கவில்லை என அறிவித்து இருந்தார். மேலும் 'தற்போது பிரதமர் மோடியின் ஆட்சியில் நாம் ராமரை பார்க்கிறோம். மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளது' என்றும் தெரிவித்து இருந்தார்.
இதனிடையே, சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் சமூக பிரச்சனைகள் குறித்து தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் பா.ஜ.க குறித்து குஷ்பூ பகிர்ந்த பழைய பதிவை தனது பக்கத்தில் பதிவிட்டுவிட்டார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக குஷ்பூ தனது பதிவில், 'நான் சாகும் வரை முஸ்லீம் தான் சகோதரனே. நான் என் மதத்தை மாற்றவில்லை, எப்போதும் மாறவும் மாட்டேன். உங்களை பொறுத்தவரை ஆன்மீகம் மதம் சார்ந்தது. ஆனால் என்னைப் பொறுத்தவரை ஆன்மீகம் ஒருமைப்பாடு பற்றியது. கடவுள் ஒருவரே என்று நான் நம்புகிறேன். ராமர் அனைவராலும் வணங்கப்படுகிறார். உங்கள் எண்ணங்களை விரிவுபடுத்துங்கள், நீங்கள் நன்றாக உணருவீர்கள், ஜெய் ஸ்ரீராம்' என்று தெரிவித்துள்ளார். குஷ்பூவின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
I will still die as a muslim brother. I haven't changed my religion. Nor ever will. For some, like you, devotion is related to religion. To me, it's about oneness. I believe God is one. #Ram is worshipped by all. Broaden your thoughts, you will feel better. #JaiShriRam 🙏🙏😊 https://t.co/Go2VXA9XvT
— KhushbuSundar (@khushsundar) January 22, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.