scorecardresearch

நடிகை குஷ்பு-வுக்கு கொரோனா தொற்று உறுதி

நடிகையும் பாஜக கட்சியை சேர்ந்தவருமான குஷ்புக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

நடிகை குஷ்பு-வுக்கு கொரோனா தொற்று உறுதி

Khushubu sundar tests positive to corona: நடிகையும் பாஜக செய்தி தொடர்பாளருமான குஷ்புவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் ஒரு நாள் பாதிப்பு 10000ஐ கடந்து உள்ளது. நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகையும், பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவருமான குஷ்புக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது.

இதுகுறித்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஆம், கடந்த 2 அலைகளில் தப்பித்த நிலையில், மூன்றாவது அலை என்னை பிடித்து விட்டது. தற்போது எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை வரை எனக்கு கொரோனா தொற்று இல்லை. மூக்கு ஒழுகல் இருந்ததால், பரிசோதனைக்கு மாதிரிகளை கொடுத்தேன். கொரோனா உறுதி செய்யப்பட்டதால், என்னை நானே தனிமைப் படுத்திக் கொண்டேன். தனிமையில் இருப்பதை வெறுக்கிறேன். அடுத்த 5 நாட்களுக்கு என்னை உற்சாகப்படுத்துங்கள். அறிகுறிகள் இருந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

குஷ்பு விரைவில் குணமடைய பல்வேறு தரப்பினர் வேண்டி வருகின்றனர். குஷ்பு கடைசியாக ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Khushubu sundar tests positive to corona