எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் 95 பிறந்த நாள் விழா நாளை புதுவை பல்கலை கழக மாநாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
தமிழ் படைப்புலகின் மூத்த படைப்பாளியும், கரிசல் இலக்கியத்தின் பிதாமகனுமான கி.ரா என்றழைக்கப்படும் கி.ராஜநாராயணனின் 95வது பிறந்த நாள், செப்டம்பர் 16ம் தேதி கொண்டாடப்படுகிறது. புதுச்சேரி பல்கலை கழக மாநாட்டு அரங்கில் காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது.
கருத்தரங்கம், வாகைமுற்றம், நிலாச்சோறு, வாழ்த்தரங்கம், விருது வழங்குதல் என பல தலைப்புகளில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாலை 5 மணிக்கு நடக்கும் வாழ்த்தரங்கிற்கு பழ.நெடுமாறன் தலைமை தாங்குகிறார். திமுக செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசுகிறார்.கிரா கடிதங்கள், பிஞ்சுகள், கிரா 95 முடிவில்லா பயணம் ஆகிய மூன்று நூல்களை நீதிபதி மகாதேவன் வெளியிடுகிறார். நடிகர் சிவகுமார், எழுத்தாளர் நாஞ்சில் நாடான், எஸ்.ஏ.பெருமாள் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் மூன்று நூல்களின் ஆய்வுரையை நிகழ்த்துகிறார். அதன் பின்னர் கி.ரா ஏற்புரை நிகழ்த்துக்கிறார். நிகழ்ச்சியை வெங்கடபிரகாஷ் ஒருங்கிணைக்கிறார். கி.ரா.பிரபி நன்றியுரை ஆற்றுகிறார்.