/indian-express-tamil/media/media_files/xbFrYs6fJxnAwSaJmfXs.jpg)
ஆகாய நடைபாலம் அமைக்க நிலம் கையகப்படுத்தலால், மறுவாழ்வு, மறுகுடியமர்வு நடைமுறைகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை நகரத்திற்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) 400 கோடி ரூபாயில் புதிய புறநகர் பேருந்து முனையத்தை கட்டியது.கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இந்த பேருந்து முனையத்தில் இருந்து சென்னையின் பல பகுதிகளுக்கு வந்து செல்ல, மாநகர பேருந்து வசதி மட்டுமே பிரதானமாக உள்ளது. ரயில் போக்குவரத்திற்காக, பேருந்து முனையம் எதிரே புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இவற்றின் இடையே, ஜி.எஸ்.டி., மற்றும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இவற்றை கடக்கும்போது பயணியர் விபத்தில் சிக்கும் அபாயம் இருக்கிறது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி., மற்றும் தேசிய நெடுஞ்சாலையை பயணியகள் எளிதாக சாலையை கடக்கவும், பேருந்து முனையம் - ரயில் நிலையத்தை இணைக்கவும் வசதியாக, 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம் அமைக்கப்பட உள்ளது.
இத்திட்டத்திற்கு தேவைப்படும் 5,900 சதுர அடி தனியார் நிறுவன புன்செய் நிலத்தை கையகப்படுத்த உள்ளதாக, செங்கல்பட்டு மாவட்ட வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நிலம் கையகப்படுத்தலால், மறுவாழ்வு, மறுகுடியமர்வு நடைமுறைகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.