கிளாம்பாக்கம் கலைஞர் நுற்றாண்டு பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் நடை மேம்பாலம் அமைக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிக கூட்டம் சேர்வதால், இதை தடுக்க கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகிறது. நேற்று முதல் இந்த பேருந்து நிலையம் முழுவதுமாக செயல்பட தொடங்கி உள்ளது.
இந்த பேருந்து நிலையத்திற்கு மக்கள் வந்து செல்ல வசதியாக இருக்க வேண்டும் என்பதால், செங்கல்பட்டு – தாம்பரம் இடையே, கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் மைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில் நிலையத்திலிருந்து மக்கள், பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல ஆகாய நடைமேடை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இதன் டெண்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 400 மீட்டர் நீளத்திற்கு இந்த ஆகாய நடைமேடை அமைக்கப்பட உள்ளது.
இந்த பணியை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது. பிப்ரவரி 14ம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின் தூக்கி வசதியுடன் இந்த நடை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
Read in English
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“